அயோத்தி ராமரை தினசரி தரிக்க வருகின்ற குரங்கு என்பதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”அயோத்தி குரங்கு தினமும் வந்து ராமச்சந்திரனை தரிசனம் செய்கிறது. மக்கள் ஹனுமந்தரின் அவதாரமாக கருதுகின்றனர்” என்பதாக இந்த வீடியோ வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அயோத்தி ராமரை தினசரி தரிக்க வருகின்ற குரங்கு என்பதாக பரவுகின்ற வீடியோவைக் குறித்து ஆராய்ந்தோம்.
குறிப்பிட்ட வைரல் வீடியோவின் பின்புலத்தில் ஒலிக்கும் குரல், “பாபா புத்தேஷ்வர் தாம்” கோயிலுக்கு தினசரி வரும் குரங்கு என்று கூறும் நிலையில் இதனடிப்படையில் அக்கோயில் குறித்து தேடினோம்.
அதன்முடிவில், உத்திரபிரதேசம் லக்னோவில் உள்ளது அக்கோயில் என்பதைத் தெரிந்து கொண்டோம். அக்கோயிலின் புகைப்படங்கள், வைரல் வீடியோவுடன் ஒத்து போவதையும் காண முடிந்தது.


தொடர்ந்து, இக்கோயில் குறித்து மேலும் ஆராய்ந்தபோது கோயிலுக்கு தினசரி வருகின்ற இக்குரங்கு குறித்த செய்தி நவபாரத் டைம்ஸ் செய்திகளிலும் வந்துள்ளதை நாம் கண்டறிய முடிந்தது.
Also Read: முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் என்று புனே இளைஞனின் படத்தை பரப்பும் நெட்டிசன்கள்!
எனவே, குரங்கு தரிசனத்திற்கு வருகின்ற கோயில் அயோத்தி அல்ல; லக்னோவில் அமைந்துள்ள புத்தேஷ்வர் மகாதேவ் கோயில் என்னும் சிவன் கோயில் என்பதை நம்மால் அறிய முடிந்தது.
Conclusion
அயோத்தி ராமரை தினசரி தரிசிக்க வருகின்ற குரங்கு என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Temple location, From Google Maps
YouTube Video, From Navbharat Times, Dated December 31, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)