Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உபி லக்னோவில் கண்டறியப்பட்ட ஆயுதங்கள்
வைரலாகும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்தே பரவுகிறது.
உபி லக்னோவில் கண்டறியப்பட்ட ஆயுதங்கள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இவ்வளவு தளவாடங்களும் லக்னோவில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. தேசவிரோதிகளுக்கு சிம்ம சொத்தனமாக விளங்கும் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச தலைநகரிலேயே இவ்வளவு குண்டுகள் என்றால், மற்ற மாநிலங்களில் நிலையை யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில் நிகழ்ந்த விபத்து என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
உபி லக்னோவில் கண்டறியப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தி குறித்து ஆராய்ந்தபோது, கடந்த ஜூன் 27ஆம் தேதியன்று “Hakim used to supply consignments of arms to Kashmir, evidence of conversation with suspects living in PoK found” என்று அமர் உஜ்வாலா செய்தி ஊடகத்தில் வெளியாகியிருந்த செய்தி கிடைத்தது.

லக்னோவில் ஆயுதங்களை தயாரித்து அவற்றை காஷ்மீருக்கு கடத்திய ஹக்கீம் ஜலாவுதீன் என்கிற நபர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. மேலும், Free Press Journal உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகியுள்ளது. எனவே, செய்தி உண்மை என்பதை அறிய முடிகிறது.
ஆனால், வைரலாகும் புகைப்படம் இச்செய்தியுடன் தொடர்புடையதா என்று ஆராய்ந்தபோது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே Wisgoon என்கிற இணையதளத்தில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

குறிப்பிட்ட புகைப்படமே இந்த லக்னோ சம்பவத்துடன் தொடர்புடையது என்பதாகப் பரவுகிறது.
Also Read: திருப்பதி கோவிலில் பணம் திருடப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
உபி லக்னோவில் கண்டறியப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் புகைப்படம் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Image from, Wisgoon, Dated July 30, 2017
X post from, Lucknow Police, Dated June 27, 2025