வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkகீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா ? உண்மை என்ன .

கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா ? உண்மை என்ன .

உரிமைகோரால் :

கீழடியில் கிடைக்கபெற்ற அம்பலத்தாடும் திருகூத்தர் நடராஜ பெருமான்!!

https://www.facebook.com/mohan.palamohan.9/videos/3331459760411763/?q=கீழடியில்%20கிடைக்கபெற்ற%20அம்பலத்தாடும்%20திருகூத்தர்%20நடராஜ%20பெருமான்!!&epa=SEARCH_BOX

சரிபார்ப்பு :

கீழடி அகழாய்வு திட்டத்தின் தொடர்ச்சியாக தமிழக அரசின் 6-ம் கட்ட அகழாய்வு பணி அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.தொன்மையான தமிழர் நாகரீகம் தோண்ட தோண்ட கிடைத்து வருகையில் இன்றுவரை மதம்சார்ந்த எந்தவொரு அடையாளமும் கிடைக்கவில்லை என்றாலும் பல மதங்களுடன் ஒன்றிணைத்து வதந்திகள் ஏராளமாய் பரப்பப்படுவதை பார்க்க முடிகிறது. கீழடியில் இருந்து நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக கீழ்காணும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்ப பட்டு வருகிறது . அதன் உண்மைத் தன்மையை நியூஸ்செக்கரில் அறியத் தொடங்கினோம்.

உண்மைத் தன்மை :

அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தில் ஊர் மக்கள் இத்தனை பேர் இருக்க வாய்ப்பில்லை. வீடியோவில் காவல்துறையைச் சேர்ந்தவர் உள்ளார். ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டி இருக்கிறார்கள், அப்பகுதியைச் சுற்றி ஒரு சில கட்டிடங்களும் உள்ளன. ஆக, எளிதாக அகழாய்வு பணிகள் நடைபெறும் பகுதி அல்ல எனப் புரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக, கீழடியில் நடராஜர் சிலை கிடைத்தது என்றால் தேசிய அளவில் செய்திகள் குவிந்து இருக்கும். ஆனால், ஜூன் 23-ம் தேதி முதல் பரவி வரும் சிலை தொடர்பாக எந்தவொரு செய்தியும் ஊடகத்தில் வெளியாகவில்லை. சில முகநூல் பதிவுகளும், சில மதம் சார்ந்த யூடியூப் சேனல்களில் மட்டுமே இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.

மேற்கொண்டு நடராஜர் சிலை குறித்து தேடிய பொழுது மயிலாடுதுறையில் ஒரு நபர் தனது புதிய வீட்டிற்கு அஸ்திவாரம் தோண்டும் போது நடராஜர் சிலை கிடைத்தது ” என இதே வீடியோவை பதிவிட்டு உள்ளார்கள்.

https://youtu.be/cPbTJoUo37M

முடிவுரை :

எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக வெளியாகும் தகவல் தவறானது. மதத்தை வைத்து இவ்வாறான தவறான செய்திகள் பரப்பப் படுகிறது .

Sources

  • Google Search
  • Facebook
  • You Tube

Result: False  

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular