Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி அளவுள்ள பாம்பு எடுக்கப்பட்டதாக சமூக வலைத் தளங்களில் செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அவ்வீடியோவில் ஒரு மருத்துவர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி நீளமுள்ள ஏதோ ஒன்றை எடுக்கிறார்.
அவ்வீடியோ உங்களுக்காக:
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோவில் காணப்படும் அந்தப் பெண் ரஷ்யாவின் தகெஸ்தாமனைச் சார்ந்தவர் என்றும் அவர் வயிற்றிலிருந்து பாம்பு எடுக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது.
இவ்வீடியோக் குறித்து தினமணி, தினத்தந்தி மற்றும் மாலை முரசு உள்ளிட்ட ஊடகங்களிலும் செய்தி வந்திருந்தது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இவ்வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
வைரலாகும் இந்த வீடியோ குறித்து நாம் தேடுகையில், இச்சம்பவத்தில் தொடர்புள்ள மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண் குறித்தத் தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து ஏதோ ஒன்று எடுக்கப்பட்டது என்பது உண்மையே. ஆனால் அது பாம்பா என்பதே கேள்விக்குறி?
இதுக்குறித்து நாம் தேடுகையில், inverse.com எனும் இணையத் தளத்தில் “Can a snake crawl in your mouth as you sleep” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
இதில், அப்பெண்ணின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது ஒரு புழுவாகவோ அல்லது குடலின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம் என்றும் அது பாம்பாக இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு காரணங்களாக சிலவற்றைக் கூறியுள்ளனர்.
அவை:
மேற்கண்ட காரணங்களை வைத்துப் பார்க்கும்போது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது பாம்பாக இருக்க வாய்ப்பே இல்லை.
Interesting Engineering எனும் இணையத்தளத்திலும் இதுக்குறித்து கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
இவர்களும் பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் அப்பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது குடலின் ஒரு பகுதியாகவோ அல்லது ஒரு நீண்ட புழுவாகவோ இருக்கலாம் என்பதும் அது கண்டிப்பாக பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.
Malai Murasu: https://www.malaimurasu.in/2020/09/02/snake-in-stomach/
Daily Thanthi: https://www.dailythanthi.com/News/World/2020/09/02055203/A-4footlong-snake-taken-from-a-womans-abdomen–a-video.vpf
IBC Tamil YouTube Channel: https://www.youtube.com/watch?v=3Ea-NSSSekk
Interesting Engineering: https://interestingengineering.com/video-of-4-feet-snake-removal-from-womans-stomach-explained?fbclid=IwAR17POON2tecyf64yVX7Io4OsN75zsAlDQy5LrHrXt6L3592fvKktCzEVeI
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)