Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கன்னியாகுமரி அருகே சாலையைக் கடந்த மலைப்பாம்பு
வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கன்னியாகுமரி அருகே சாலையைக் கடந்த மலைப்பாம்பு என்று வீடியோ ஒன்று செய்திகளில் வெளியாகியுள்ளது.
”கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சாலையை கடந்து சென்ற ராட்சத மலைப்பாம்பு” என்று புதியதலைமுறை உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளன.


சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
கன்னியாகுமரி அருகே சாலையைக் கடந்த மலைப்பாம்பு என்று புதியதலைமுறை வெளியிட்ட வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2022ஆம் ஆண்டு முதலே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.
கடந்த மார்ச் 05, 2022 அன்று முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான Susanta Nanda இந்த வீடியோவைத் தனது X பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால், இது எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்று அவர் விளக்கமளித்திருக்கவில்லை.
மேலும், கடந்த மார்ச் 06, 2022 அன்று ETVBharat வெளியிட்டிருந்த செய்தியில் இந்த மலைப்பாம்பு குறித்து ”Watch a 12 feet long python crossing road in Karnataka’s Karwar” என்று அது கர்நாடகாவில் சாலையைக் கடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, இந்த வீடியோ காட்சி குறித்து ஆராய்ந்தபோது கடந்த மார்ச் 20, 2022 அன்று Times of India வெளியிட்டிருந்த “This snake’s video has gone viral on social media, but it’s not an ‘anaconda’” என்கிற செய்தியில் இந்த வீடியோ காட்சி இடம்பெற்றிருந்தது. அதன்படி, கேரளா வயநாட்டில் இந்த மலைப்பாம்பு சாலையைக் கடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு இடங்களில் இந்த நிகழ்வு நடைபெற்றது என்பதாக இவ்வீடியோ பரவி வந்தாலும் உண்மையான நிகழ்விடம் தெரியவில்லை. குறிப்பிட்ட பழைய வீடியோவே தற்போது கன்னியாகுமரியில் சாலையைக் கடந்த மலைப்பாம்பு என்பதாக வைரலாகி வருகிறது என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
கன்னியாகுமரி அருகே சாலையைக் கடந்த மலைப்பாம்பு என்று புதியதலைமுறை வெளியிட்ட வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By, Susanta nanda IFS, Dated March 05, 2022
Self Analysis