Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: மழை வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள் படும் அவதி
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2023 மழை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதாகும்.
மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”மழை வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள் படும் அவதி” என்று அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு மது அருந்திவிட்டு வந்தாரா புஸ்ஸி ஆனந்த்?
மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் சத்யபாமா பல்கலைக்கழகம் என்று இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய கீ-வேர்டுகள் மூலமாக தேடினோம் அப்போது, “@sathyabama flood 2023….. Chennai @Michaung” என்று கடந்த டிசம்பர் 15, 2023 அன்று யூடியூபில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது.
அதில் இடம்பெற்றிருக்கும் மாணவர்களும், வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சியில் உள்ள மாணவர்களும் ஒன்றே என்பதை நம்மால் அறிய முடிந்தது.
மேலும், இன்ஸ்டாகிராமில் கடந்த டிசம்பர் மாதம் இதே மாணவர்கள் இடம்பெற்றிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ள மற்றொரு வீடியோவும் இடம்பெற்றுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ள நிகழ்வு வீடியோவையே தற்போதையது என்பதாக செய்தி நிறுவனங்கள் உட்பட பலரும் பரப்பி வருகின்றனர்.
Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு… வைரலாகும் படத்தின் உண்மை பின்னணி!
மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று பரவும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு மழை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video From, muskansingh vlogs, Dated December 15, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 2, 2024
Vijayalakshmi Balasubramaniyan
November 29, 2024
Ramkumar Kaliamurthy
November 27, 2024