ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதிருமணமாகிய 23 வருடத்தில் 24 குழந்தைகளின் தாயான பெண்மணி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

திருமணமாகிய 23 வருடத்தில் 24 குழந்தைகளின் தாயான பெண்மணி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: 23 வருசத்தில் ஒற்றை இரட்டை குழந்தைகள் என 24 குழந்தைகளுக்குத் தாய்

Fact: வைரலாகும் வீடியோ அப்பெண்ணின் நகைச்சுவையான பதிலைக் கொண்டதாகும்.

திருமணமாகிய 23 வருடத்தில் 24 குழந்தைகளுக்கு தாயான பெண்மணி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”திருமணம் முடிந்து 23 வருசத்தில் ஒற்றை இரட்டை குழந்தைகள் என 24 குழந்தைகளுக்குத் தாயென யாராலும் கூற முடியாது… இன்னும் இளமை துள்ளுகிறது…குழந்தை தயாரிப்பு தொடருமாம்‌..வாழ்த்துவோம் இத்தாயை இந்து ஜனத்தொகையை பெருக்கும் வேகத்திற்கு…நம்மவர்கள் இவ்வளவு பெற்றுக்கொள்ளாவிட்டாலும் குறைந்த பட்சம் நான்கு பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from X @chiterumbu

X Link/Archived Link

Screenshot from Facebook/sonaiah.baskaran

Facebook Link/Archived Link

Screenshot from Facebook/YESSJANA

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் 2018ஆம் ஆண்டு செய்தி!

Fact Check/Verification

திருமணமாகிய 23 வருடத்தில் 24 குழந்தைகளின் தாயான பெண்மணி என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலில் இந்த வீடியோ குறித்து அறிந்துகொள்ள ஆராய்ந்தபோது அப்பெண்மணியின் வீடியோ பல்வேறு தளங்களிலும் இடம்பெற்றிருந்தது. அதில் தன்னை குஷ்பு பதக் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் அப்பெண், 23 வருட திருமணத்தில் தனக்கு 24 குழந்தைகள் என்றும், முதல் குழந்தைக்கு 18 வயது என்று கூறுவதும் நமக்குக் கிடைத்தது.

இவரது பேட்டியைப் பகிர்ந்திருந்த Public Khabar என்கிற யூடியூப் பக்கத்தில், “இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட வீடியோ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து குஷ்புவின் Apja AJ என்னும் யூடியூப் பக்கத்தைப் பார்வையிட்டபோது அதில் அவர் மற்றும் பலர் நடித்திருந்த சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் நமக்குக் கிடைத்தது.

நம் தொடர் தேடலில் கடந்த ஆகஸ்ட் 14, 2024 அன்று Dilli 24  வெளியிட்டிருந்த குஷ்புவின் பேட்டியில் 24 குழந்தைகளுக்கு தாய் என்கிற பதில் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்ட ஒன்று என்று விளக்கமளித்திருந்தார் அவர்.

மேலும், அவரது இந்த விளக்கப்பேட்டி News24 UP & Uttarakhand, Khabar Duniya உள்ளிட்ட இணையப்பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. இதன்முடிவில் மேலும் அவருக்கு 2 குழந்தைகள் மட்டுமே, மற்ற 22 குழந்தைகள் என்று அவர் தன்னுடைய செடிகள் மற்றும் மரங்களைச் சொல்கிறார் என்பதும் PG News வெளியிட்டிருந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

குஷ்பு பதக்கின் நகைச்சுவையான பதில் இடம்பெற்றுள்ள பேட்டி வீடியோக்களே எடிட் செய்யப்பட்டு 23 வருடத்தில் 24 குழந்தைகளுக்கு தாய் என்பதாக தவறாகப் பரவி வருகிறது என்பது தெளிவாகியது.

 Also Read: சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

திருமணமாகிய 23 வருடத்தில் 24 குழந்தைகளின் தாயான பெண்மணி என்று பரவும் வீடியோ தகவல்  தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Channel apna aj.
Khushbu Pathak’s interview to YouTube channel Delhi 24.


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular