Fact Check
அமெரிக்க இஸ்லாமியர்கள் இந்துக்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று போராடினரா?
Claim
அமெரிக்க இஸ்லாமியர்கள் இந்துக்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று போராட்டம்
Fact
வைரலாகும் வீடியோ தகவல் திரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது.
அமெரிக்க இஸ்லாமியர்கள் இந்துக்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அமெரிக்க முஸ்லிம்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்…. காய்கறிகளின் விலை உயர்ந்ததால் அல்ல…. அவர்கள் இந்து கடைகளில் இருந்து முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று ரோடு ரோடாக பிரச்சாரம் செய்கின்றனர். ” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கரூர் நபர்களுக்கு பதிலாக இளம் ஜோடி காலில் தவறுதலாக விழுந்த விஜய் என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Fact Check/Verification
அமெரிக்க இஸ்லாமியர்கள் இந்துக்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் இமேஜ் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2022ஆம் ஆண்டு முதலே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது நமக்கு உறுதியாகியது.
கடந்த ஜூன் 19, 2022 அன்று Muslim Mirror ஊடகத்தில் “Protest held outside Indian consulate in Chicago over remarks on Prophet Muhammad” என்கிற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தியில் குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள அதே பதாகைகளைக் காண முடிகிறது.
நபிகள் நாயகம் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய BJP உறுப்பினர்களுக்கு எதிராக சிகாகோவில் இஸ்லாமியர்களும், இஸ்லாமியர் அல்லாதவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதாக அச்செய்தியில் இடம்பெற்றுள்ளது.


மேலும், maktoobmedia என்கிற ஊடகத்திலும் கடந்த 2022ஆம் ஆண்டு, “Hundreds in Chicago protest offensive comments on prophet by BJP officials” என்கிற தலைப்பில் இதுகுறித்த செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை விஜய் சந்தித்ததாக பரவும் பழைய படங்கள்!
Conclusion
அமெரிக்க இஸ்லாமியர்கள் இந்துக்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report By, Muslim Mirror, Dated June 19, 2022
Report By, MaktoobMedia, Dated June 23, 2022