Fact Check
பாஜகவுக்கு எதிராக செய்திகளை திரித்து பரப்புவதே எனது வேலை என்றாரா ஊடகவியலாளர் செந்தில் வேல்?

பாஜகவுக்கு எதிராக செய்திகளை திரித்து பரப்புவதே எனது வேலை என்று ஊடகவியலாளர் தி. செந்தில் வேல் கூறியதாக பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“நான் ஒரு மிஷினரி கைக்கூலி. பாஜக நல்லதே செய்தாலும் எதிர்ப்பது மட்டுமே என் பணி, பாஜகவுக்கு எதிரான செய்திகளை திரித்து பரப்புவது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை” என்று மூத்த பத்திரிக்கையாளர் தி.செந்தில் வேல் அவர்கள் கூறியதாக பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
நான் ஒரு கிறித்தவ மிஷனரியின் கைக்கூலி, பாஜக நல்லதே செய்தாலும், அதை திரித்து தவறாகவே பரப்புவதுதான் தனது வேலை என்று பத்திரிக்கையாளர் செந்தில் வேல் கூறியதாக பரப்பப்படும் நியூஸ்கார்டை காணும்போதே அது பொய்யானதுதான் என புரிந்து கொள்ள முடிகின்றது.
ஏனெனில் எந்த பத்திரிக்கையாளரும் பொது வெளியில் இவ்வாறு ஒரு கருத்தைக் கூற மாட்டார்கள். மேலும் வைரலாகும் நியூஸ்கார்டில் பாலிமர் நியூஸில் வழக்கமாக பயன்படுத்தப்படும் வாட்டர் மார்க் இல்லை, போதாதற்கு அந்த கார்டில் இலக்கணப் பிழையும் காணப்படுகின்றது.
இருப்பினும் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பலர் பகிர்ந்து வருவதால் இதன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முன்னதாக இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை பாலிமர் நியூஸ் பதிவிட்டுள்ளதா என்பதை அறிய பாலிமர் நியூஸின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
நம் தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்ட் பதிவிடப்பட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பாலிமர் நியூஸின் எடிட்டர் அவர்களைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம். இதற்கு அவர்,
இது பொய்யான நியூஸ்கார்ட், இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை
என்று விளக்கமளித்தார்.
இதனடிப்படையில் காணும்போது ஊடகவியலாளர் செந்தில் வேல் குறித்து பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் தவறானது என்பது நிரூபணமாகின்றது.
Also Read: குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததா?
Conclusion
பாஜகவுக்கு எதிராக செய்திகளை திரித்து பரப்புவதே எனது வேலை என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று என்பதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Polimer News:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)