வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact Checkஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்தாரா ஊடகவியலாளர் செந்தில்வேல்?

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்தாரா ஊடகவியலாளர் செந்தில்வேல்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்து ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஊடகவியலாளர் செந்தில் வேல் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்ததாக வைரலாகும் டிவீட்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்  கிங் ரிச்சர்ட் எனும் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். இந்நிலையில், “உழைக்கும் மக்களின் குரலாக ஜெய்பீம் திரைப்படத்தில் ஒலித்த நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், ஹரித்வாரில் கங்கா ஆரத்தியில் பங்கேற்று முழு சங்கியாக மாறி விட்ட ஹாலிவுட் நடிகர் சனாதனவாதி வில் ஸ்மித்திற்கு கிடைத்திருப்பது வேதனை அளிக்கின்றது” என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஊடகவியலாளர் செந்தில் வேல் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்ததாக வைரலாகும் டிவீட்  - 1

Facebook Link

ஊடகவியலாளர் செந்தில் வேல் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்ததாக வைரலாகும் டிவீட்  - 2

Facebook Link

ஊடகவியலாளர் செந்தில் வேல் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்ததாக வைரலாகும் டிவீட்  - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் செய்ததாக கூறி வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.

இவ்வாறு தேடியதில் செந்தில் வேல் அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.

உண்மையில் செந்தில்வேல் பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், செந்தில்வேல் அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது செந்தில் வேல் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.

Archive Link

செந்தில்வேல் அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @Senthilvel79 என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @Senthillvel79 (இதில் ஒரு ‘l’ கூடுதலாக உள்ளது) என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐடியிலேயே அது Sarcasm (போலிக் கணக்கு) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

போலிக் கணக்கு
Screen shot of Parody Account

வாசகர்களின் புரிதலுக்காக செந்தில்வேல் அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதேபோல் செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்ட பல டிவீட்டுகள் சமூக வலைத்தளங்களில் இதற்கு முன்னர் வைரலாகியுள்ளது. அவற்றையெல்லாம் நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து தெளிவு படுத்தியுள்ளோம்.

Conclusion

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டது என்பது கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Twitter Advanced Search


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular