செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

HomeFact Checkஷ்யாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?

ஷ்யாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று ஊடகங்களில் பரவி வருகின்றது.

ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல்

நானி , சாய் பல்லவி, கிரீத்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் ஷ்யாம் சிங்கா ராய். இப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

இப்படத்தின் கதைக்களம் 1970 களில் கொல்கத்தாவில் நடப்பதாக உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த தேவதாசி முறை, சாதிய பாகுபாடு, தீண்டாமைக்கு எதிரான காட்சிகள் பெரும் வரவேற்பையும் விவாதத்தையும் உருவாக்கியிருந்தது.

தற்போது இப்படமானது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் சிறந்த பீரியாடிக் படம், பின்னணி இசை மற்றும் சிறந்த கிளாசிக்கல் கல்ச்சுரல் படம் என்கிற மூன்று பிரிவுகளில் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் - 01

Twitter Link | Archive Link

ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் - 02

Twitter Link | Archive Link

Also Read: ஈழத் தமிழர்களுக்கு தரும் இலவசங்களை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று சீமான் பேசினாரா?

ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் ஒன்று ஊடகங்களில் வந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக பீரியாடிக் , பின்னணி இசை மற்றும் கிளாசிக்கல் கல்ச்சுரல் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் தரப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய,  உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி இதுக்குறித்து இணையத்தில் தேடினோம். இதில் மேற்கண்ட பிரிவுகளில் இதற்கு முன் விருது கொடுக்கப்பட்டதாக எவ்வித தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து ஆஸ்கர் விருதுகளை தரும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of Motion Picture Arts and Sciences) நிறுவனத்தை ஈமெயில் வாயிலாக தொடர்புக் கொண்டு  மேற்கண்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருது தரப்படுகின்றதா, ஷயாம் சிங்கா ரங்கா ராய் பரிந்துரைபட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரித்தோம்.

இதற்கு ஆஸ்கர் நிறுவனம் சார்பில் மைக்கேல் பெனடிக் என்பவர் பதிலளிக்கையில், “இவ்வருடத்தின் கடைசி அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கம் வரை நாங்கள் எந்தெந்த படங்கள் பரிந்துரையில்யில் இடம்பெற்றுள்ளது என்பதை வெளியில் பகிர மாட்டோம். பீரியாடிக், பின்னணி இசை மற்றும் கிளாசிக்கல் கல்ச்சுரல் ஆகிய பிரிவுகளில் நாங்கள் விருதுகள் தருவதில்லை என்று பதிலளித்திருந்தார்.

மேலும் ஆஸ்கர் விருதுகள் குறித்த விதிமுறைகள் இணையத்தளத்தையும் பெனடிக் நம்முடன் பகிர்ந்திருந்தார். அந்த இணையத்தளத்தில் ஆஸ்கர்  தரப்படும் பிரிவுகள் குறித்து முழுமையாக விளக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்று இடம்பெற்றிருந்ததை நம்மால் காண முடிந்தது. அந்த ஆவணத்தில் பீரியாடிக் , பின்னணி இசை மற்றும் கிளாசிக்கல் கல்ச்சுரல் ஆகிய பிரிவுகள் இடம்பெற்றிருக்கவில்லை

இந்தியாவில் ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (the Film Federation of India (FFI)) எனும் நிறுவனமே ‘சிறந்த உலக திரைப்படத்திற்கான விருது’க்கு திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும். இந்நிறுவனத்தின் இணையத்தளத்தை தீவிரமாக ஆய்வு செய்ததில், ஷ்யாம் சிங்கா ராய் குறித்தோ, இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் பிரிவுகள் குறித்தோ எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியவை தொடர்புக்கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து நமக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை, ஒருவேளை கிடைக்கும்பட்சத்தில் அதை இக்கட்டுரையுடன் இணைப்போம் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதனையடுத்து தேடுகையில் சினிமா எக்ஸ்பிரஸ் வைரலாகும் தகவல் தவறானது என்று செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. சினிமா எக்ஸ்பிரஸைத் தொடர்புக் கொண்டு பேசுகையில், ஷ்யாம் சிங்கா ராய் திரைப்பட குழுவை  சார்ந்தவர்கள் இத்தகவலை மறுத்ததாகவும், இந்த செய்தி அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

Also Read: வாடகை வீட்டிலிருப்பவர்கள் 18% GST செலுத்த வேண்டுமா?

Conclusion

ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

(இந்த கட்டுரையானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது)

Result: False

Sources

Complete rules, 95th Academy Awards of Merit
Email with the Academy of Motion Picture Arts and Sciences
Cinema Express report, August 21, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular