வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024

HomeFact Checkசீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் தவறான படம்!

சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் தவறான படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உடல்தானம் செய்த சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்திய படம்!

Fact: இத்தகவல் தவறானதாகும். சீனாவில் மூளை அனியூரிஸம் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அந்த மருத்துவரின் உடலுக்கு சக மருத்துவர்கள் மரியாதை செய்த படமே இவ்வாறு பரப்பப்படுகின்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி காலமானதை தொடர்ந்து அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது உடலுக்கு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்திய படம்!

X Link | Archive Link

சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்திய படம்!

Facebook | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?

Fact Check/Verification

உடல்தானம் செய்த சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் ‘Chinese doctor dies while volunteering in Tibet, donates his organs’ என்று தலைப்பிட்டு CGTN ஊடகத்தில் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியானது செப்டம்பர் 30, 2016 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்திய படம்!
CGTN ஊடகத்தில் வெளிவந்த செய்தி

சீனாவில் சாவ் ஜு (41) எனும் மருத்துவர் மூளை அனியூரிஸம் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாகவும், அந்த மருத்துவரின் உடலுக்கு சக மருத்துவர்கள் தலை சாய்த்து மரியாதை செலுத்தியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் CGTN ஃபேஸ்புக் பக்கத்திலும் இதுக்குறித்த பதிவு வைரலாகும் புகைப்படத்துடன் வேறு சில புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களும் இதே தகவலுடன் இதே படத்தை பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

 Also Read: வந்தே பாரத் ரயிலை அடித்து உடைக்கும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

உடல்தானம் செய்த சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் புகைப்படம் தவறானதாகும். உண்மையில் அப்படமானது சீனாவில் உடல் உறுப்புகள் தானம் செய்த சாவ் ஜூ எனும் மருத்துவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படமாகும்.  

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from CGTN, Dated September 30, 2016
Facebook post from CGTN, Dated September 30, 2016

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular