வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkசீதாராம் யெச்சூரி கிறித்தவர் என்று பரவும் வதந்தி!

சீதாராம் யெச்சூரி கிறித்தவர் என்று பரவும் வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர்.

Fact: இத்தகவல் தவறானதாகும். அவர் தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தவராவார்.

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர்.

X Link | Archive Link

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர்.

Archive Link

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் தவறான படம்!

Fact Check/Verification

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர் என்று தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

அதில் சீதாராம் யெச்சூரி 2017 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் பேசிய உரை ஒன்றை நம்மால் காண முடிந்தது. அந்த உரையில் (16:02 நேரத்தில்), “நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தேன்.. இஸ்லாமிய சூஃபி இனத்தை சார்ந்த ஆணுக்கும் மைசூர் ராஜபுத்திர இனத்தை சேர்ந்த பெண்ணுக்கும் மகளாக பிறந்த பெண்ணை மணந்தேன்.. இந்த இரண்டு இனங்களை சேர்ந்தவர்களுக்கு பிறந்த பெண்ணை தென்னிந்தியாவின் பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஆணாகிய நான் மணந்துள்ளேன். இப்போது என் மகன் எந்த இனத்தை சேர்ந்தவன்? அவன் பிராமணனா? அவன் முஸ்லீமா? அவன் இந்துவா? அவன் யார்? அவனை இந்தியன் என்று குறிப்பிடுவதை தவிர்த்து வேறு எப்படியும் குறிப்பிட முடியாது…” என்று அவர் பேசி இருப்பதை காண முடிந்தது.

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர்.

தொடர்ந்து தேடுகையில் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு சீதாராம் யெச்சூரி நேர்காணல் ஒன்றில் தன் பெயர் காரணம் குறித்து பேசி இருப்பதை காண முடிந்தது. அவரது தாத்தாவின் பெயரான ‘சீதாராமாராவ்’ எனும் பெயர் அவருக்கு வைக்கப்பட்டதாகவும், சாதி அடையாளமான ‘ராவ்’ என்பதை நீக்கி சீதாராம் எனும் பெயரை மட்டும் பயன்படுத்துவதாகவும் அந்த நேர்காணலில் (01:52 நேரத்தில்) அவர் தெரிவித்திருந்தார்.

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் சீதாராம் யெச்சூரி பிறப்பால் இந்து மதத்தை சார்ந்தவர் என அறிய முடிகின்றது.

இதனையடுத்து வைரலாகும் படம் குறித்து தேடினோம். இத்தேடலில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் யெச்சூரியின் உடல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர்.

தொடர்ந்து தேடுகையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவ அமைப்பின் எக்ஸ் பக்கத்திலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன் இதுக்குறித்து பதிவு பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அப்புகைப்படங்களுள் வைரலாகும் படமும் ஒன்றாகும்.

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர்.

இதன்படி பார்க்கையில் சீதாராம் யெச்சூரியின் உடல் பார்வைக்காகவே வைக்கப்பட்டுள்ளது, இதைத் தவிர்த்து இறுதிச் சடங்குக்காக வைக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.

இதனையடுத்து தேடுகையில் எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியை ரிமா தாதா ஏஎன்ஐ-க்கு தந்த நேர்காணல் ஒன்றை காண முடிந்தது. இந்த நேர்காணலில் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டதாகவும், தானம் கொடுத்த உடலை பல்வேறு வேதிப் பொருட்களை பயன்படுத்தி பதப்படுத்தி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தவிருப்பதாகவும் அவர் பேசி இருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக தரப்பட்டதால் இறுதிச்சடங்கு ஏதும் நடத்தப்படவில்லை என இந்து வெளியிட்டிருந்த செய்தியின் வாயிலாக அறிய முடிந்தது

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர்.

இந்து தவிர்த்து வேறு சில ஊடகங்களும் சீதாராம் யெச்சூரிக்கு இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் சீதாராம் பிறப்பால் ஒரு இந்து என்பதும், அவருக்கு கிறித்தவ மதம் அல்லது எந்த மதப்படியும் இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை எனவும் உறுதியாகின்றது.

ஆகவே சீதாராம் யெச்சூரி கிறித்தவர் என்று அர்ஜூன் சம்பத் பரப்பிய தகவல் அடிப்படை ஆதாரமற்ற பொய் தகவல் என தெளிவாகின்றது.

 Also Read: மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?

Conclusion

சீதாராம் யெச்சூரி கிறித்தவ மதத்தை சார்ந்தவர் என்று அர்ஜூன் சம்பத் உட்பட பலர் சமூக ஊடகங்களில் பரப்பிய தகவல் முற்றிலும் பொய்யானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
YouTube Video By Sansad TV, Dated August 10, 2017
YouTube Video By Hindustan Times, Dated October 14, 2018
Report By The New Indian Express, Dated September 13, 2024
X post By Union of the Students’ of Jawaharlal Nehru University, September 14, 2024
Report By ANI, Dated September 14, 2024
Report By The Hindu, Dated September 15, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular