ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkநடிகை சாய்பல்லவி திருமணப் புகைப்படம் என்று பரவும் வதந்தி!

நடிகை சாய்பல்லவி திருமணப் புகைப்படம் என்று பரவும் வதந்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: நடிகை சாய்பல்லவி திருமணப் புகைப்படம்

Fact: வைரல் புகைப்படத் தகவல் ஒரு வதந்தியாகும்.

நடிகை சாய்பல்லவி திருமணம் நடந்துவிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“Finally She got Married And She Prove That Love Has No Colour..Hats off Sai Pallavi” என்று ஆங்கிலப் பதிவுடன் இப்புகைப்படம் பரவி வருகிறது.

நடிகை சாய்பல்லவி
Screenshot from Facebook/SaiPallaviFandomX330

Facebook Link

Screenshot from Facebook/manishacontact99

Facebook Link

Screenshot from Facebook/SaYcho Manu

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check/Verification

நடிகை சாய்பல்லவி திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடைய திருமணப் புகைப்படம் என்றும் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தில் சாய் பல்லவியுடன் இருப்பவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்பதை நம்மால் அறிய முடிந்தது. மேலும், குறிப்பிட்ட புகைப்படம் புதிய படத்திற்கான பூஜையில் எடுக்கப்பட்டது போன்று இருந்தது.

எனவே, அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆராய்ந்தபோது குறிப்பிட்ட புகைப்படம் சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி இணைந்து நடிக்கும் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கும் நிலையில் அதன் பூஜையின் போது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகியது.

கடந்த மே 09ஆம் தேதி, சாய்பல்லவியின் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து ராஜ்குமார் பெரியசாமி தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் SK21 பூஜையின்போது கழுத்தில் மாலையுடன் சாய்பல்லவியுடன் அவர் நிற்கும் புகைப்படம் உட்பட பல புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்தே எடிட் செய்து சாய்பல்லவிக்கு திருமணம் நடந்துவிட்டதாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகியது.

இந்நிலையில், நடிகை சாய்பல்லவியும் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ”Honestly, I don’t care for Rumours but when it involves friends who are family, I have to speak up. An image from my film’s pooja ceremony was intentionally cropped and circulated with paid bots & disgusting intentions. When I have pleasant announcements to share on my work front, it’s disheartening to have to explain for all these jobless doings. To cause discomfort like this is purely vile!” என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Also Read: மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

நடிகை சாய்பல்லவி திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடைய திருமணப் புகைப்படம் என்றும் பரவும் தகவல் தவறாகப் பரவுகிறது என்பதை என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post from Raaj Kamal Films International, Dated May 05, 2023
X post from Rajkumar Periyasamy, Dated May 09, 2023
X post From, Sai Pallavi, Dated September 22, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular