Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திரிசூல் ராணுவ பயிற்சி பீகார் தேர்தலுக்கு முன் நடத்தப்படும் நாடகம் என்றார் இராணுவ கர்னல் சோபியா குரேஷி.
வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோவாகும்.
இந்தியக் கடற்படையின் தலைமையில் இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து நடத்துகின்ற முப்படைகளின் பயிற்சியான திரிசூல் ராணுவ பயிற்சி பீகார் தேர்தலுக்கு முன் நடத்தப்படும் நாடகம் என்று இராணுவ கர்னல் சோபியா குரேஷி கூறியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
“இன்று நான் இந்திய ராணுவத்தின் ஒரு சிப்பாயாக இங்கே நிற்கின்றேன்; ஒரு அரசியல் கைப்பாவையாக அல்ல. இரண்டரை ஆண்டுகளாக எனது நாட்டிற்காக பெருமையுடன் சேவை செய்து வந்தேன்; எங்கள் சொந்த குடிமக்களைப் பிரிக்க ஒரு கருவியாக நாங்கள் பயன்படுத்தப்பட்டதை உணரும் வரை.
எங்கள் பொறுப்புகள் மீது காவி சாயம் பூசுவது நாங்கள் எடுத்த சத்தியப் பிராமாணத்திற்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
எங்கள் வேலை இந்தியாவை பாதுகாப்பதேயொழிய பாஜக அல்லது ஆர்எஸ்எஸ்-ஸின் சித்தாந்தங்களை பாதுகாப்பது அல்ல.
பீகார் தேர்தலுக்கு முன் நடத்தப்படும் இந்த திரிசூல் ராணுவ பயிற்சி நாட்டை ஏமாற்ற நடத்தப்படும் நாடகமாகும். எங்கள் சீருடைமேல் பூசப்படும் சித்தாங்கள் பெருமை அல்ல. இது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த உண்மையை பேசுவதால் என் பதவி பறிக்கப்படலாம். பறிக்கட்டும். நான் இந்தியாவுக்காக நிற்பேன்; வெறுப்பு பிரச்சாரத்துக்கு அல்ல”
என்று சோபியா குரேஷி அவ்வீடியோவில் பேசுவதாய் இருந்தது.
சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரியாணியில் சாக்கடை நீரை கலந்த இஸ்லாமியர்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
திரிசூல் ராணுவ பயிற்சி பீகார் தேர்தலுக்கு முன் நடத்தப்படும் நாடகம் என்று இராணுவ கர்னல் சோபியா குரேஷி பேசியதாக பரப்பப்படும் வீடியோவில் ANI ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருந்ததால் அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் இவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் “Sofiya Qureshi’s must watch msg to Gen-Z after Op Sindoor at Indian Army’s Chanakya Defence Dialogue” என்று தலைப்பிட்டு ANI யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் அதே பின்புலத்தில் சோபியா குரேஷி பேசுவைதை காண முடிந்தது.
ஆனால் அவ்வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட எந்த கருத்தையும் அவர் பேசி இருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் வீடியோவை கூர்மையாக கவனிக்கையில் அவ்வீடியோவில் சோபியா குரேஷியின் அசைவுகள் மற்றும் வாயசைவுகள் இயல்பானதாக இல்லாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளுடன் இருப்பதை காண முடிந்தது.
ஆகவே செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களை கண்டறிய உதவும் கருவிகளான Hive Moderation, Hiya Deepfake Voice Detector, ElevenLabs Detector உள்ளிட்டவற்றில் வைரலாகும் வீடியோ குறித்து சோதித்தோம்.


அச்சோதனையில் வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்ட வீடியோ என பதில் வந்தது.
இதனையடுத்து தேடுகையில் ஒன்றிய அரசின் ஃபேக்ட்செக் அமைப்பான “PIB Fact Check” அமைப்பின் எக்ஸ் பக்கத்திலும் வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: ‘உங்க விஜய்’ பாடலை ரசிக்கும் இயக்குநர் கெளதம் மேனன் என்று பரவும் வீடியோ உண்மையா?
திரிசூல் ராணுவ பயிற்சி பீகார் தேர்தலுக்கு முன் நடத்தப்படும் நாடகம் என்று இராணுவ கர்னல் சோபியா குரேஷி பேசியதாக பரப்பப்படும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோவாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த ஃபேக்ட்செக் கட்டுரையானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
Sources
YouTube Video By ANI, Dated October 31, 2025
Hive Moderation Website
ElevenLabs Detector Website
Hiya Deepfake Voice Detector
X Post By PIB Fact Check, Dated November 3, 2025
Vijayalakshmi Balasubramaniyan
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 20, 2025