Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்கள் காலமானதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.ph/mUgOl
பாஜக மூத்த தலைவர் சுமித்ரா மகாஜன், கடந்த 2014 – 2019 காலகட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் போது மக்களவை சபாநாயகராக இருந்தார்.
கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 8 மக்களவை தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பாஜக எம்.பியாக இருந்துள்ளார். நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் எம்.பியாக இருந்த பெண் என்ற பெருமையை பெற்றவர்.
இவர் காய்ச்சல் காரணமாக இந்தூரில் உள்ள பாம்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.ph/LAz99
Archive Link: https://archive.ph/8w8pp
Archive Link: https://archive.ph/BirQQ
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சுமித்ரா மகாஜன் அவர்கள் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்த தேடினோம்.
நம் தேடலில் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் முற்றிலும் தவறானது என்பதை நம்மால் அறிய முடிந்தது. சுமித்ரா மகாஜனின் இளைய மகன் மந்தார் மகாஜன் அவர்கள் சுமித்ரா மகாஜன் குறித்து பரவும் இத்தகவல் குறித்து மறுப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வீடியோவில்,
“என் அம்மா மிகவும் நலமாக உள்ளார். என் அம்மா குறித்து பொய் செய்தி ஒன்று பரவியுள்ளது. அது முற்றிலும் பொய்யான செய்தி. அதை யாரும் நம்ப வேண்டாம். அவரின் கோவிட் மருத்துவ அறிக்கையில் கூட ‘நெகட்டிவ்’ என்றே வந்துள்ளது. நான் அவரை நேற்று மாலைதான் சந்தித்தேன். அவர் நலமாகத்தான் உள்ளார்.”
என்று தெரிவித்துள்ளார்.
அவ்வீடியோ உங்கள் பார்வைக்காக:
முன்னதாக, சமூக வலைத்தளங்களில் பரவிய இத்தகவலை உண்மை என நம்பி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் சுமித்ரா மகாஜன் மறைவுக்கு இரங்கல் பதிவு வெளியிட்டார். சசி தரூரின் இந்த டிவீட்டைக் கண்ட பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா, சுமித்ரா மகாஜன் நலமாக இருக்கிறார் எனத் தெளிவுபடுத்தி இருந்தார்.
இதன்பின் சசி தரூர் தனது டிவீட்டை நீக்கி விட்டு,
“நன்றிகள் கைலாஷ் விஜய வர்க்கியா. நான் என்னுடைய ட்வீட்டை நீக்கி விட்டேன். இதுபோன்ற தீய செய்திகளைக் கண்டுபிடித்துப் பரப்புவதற்கு மக்களைத் தூண்டுவது எது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. சுமித்ரா அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட வாழ்வுக்கு எனது வாழ்த்துகள்”
என்று விஜய் வர்க்கியா அவர்களுக்கு பதில் டிவீட் செய்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவிய இத்தகவல் பொய்யானது என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
Conclusion
மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்கள் காலமானதாக சமூக வலைத்தளங்களில் பரவியத் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Vision TV World: https://www.youtube.com/watch?v=yAmE0j_00r0
Kailash Vijayvarghiya:-
Nakkheeran: https://www.nakkheeran.in/24-by-7-news/india/sumitra-mahajan-son-reacts-fake-news-about-his-mother-health
Dinamani: https://www.dinamani.com/india/2021/apr/23/sumitra-mahajan-is-fine-now-bjp-3609915.html
Dailythanthi: https://www.dailythanthi.com/News/India/2021/04/23085705/Fake-news-of-Sumitra-Mahajans-death-goes-viral.vpf
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.