திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

HomeFact Checkஅபிநந்தன் பாஜக ஆதரவாளர் என்று பரவும் வதந்தி

அபிநந்தன் பாஜக ஆதரவாளர் என்று பரவும் வதந்தி

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அபிநந்தன் குறித்து பரவும் தகவல்

தமிழகத்தைச் சார்ந்த இராணுவ விமானியான அபிநந்தன் வர்ததமான் அவர்களை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு அபிநந்தன் அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்ததால், அவரது விமானம் பாகிஸ்தான் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

விமானத்தால் இருந்து இவர் பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லையில் தரை இறங்கினார். அப்போது அங்கு கூடி இருந்த மக்கள் அவரைத் தாக்க, பாகிஸ்தான் இராணுவம் அவரை அவர்களிடமிருந்து மீட்டு அருகாமையில் இருந்த இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை செய்தனர். இந்த விசாரணை வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

2019 பிப்ரவரி 28 அன்று பாகிஸ்தான் அரசு அமைதிப்பேச்சுக்கான ஒரு அறிகுறியாக அபிநந்தனை 2019 மார்ச் 1 அன்று வாகா எல்லையில் விடுவிப்பதாக அறிவித்தது. இதன்படி 2019 மார்ச் 1 ஆம் நாள் இரவு 9.23 மணியளவில் அபிநந்தன் அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.

ஆனால் இச்சம்பவம் அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவால் போலியாக உருவாக்கப்பட்ட நாடகம் என்றும், அபிநந்தன் ஒரு பாஜக ஆதரவாளர் என்றும் கூறி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அபிநந்தன் குறித்து பரவும் பதிவு - 1

Archive Link: https://archive.ph/z56V8

அபிநந்தன் குறித்து பரவும் பதிவு - 2

Archive Link: https://archive.ph/Szh4g

அபிநந்தன் குறித்து பரவும் பதிவு - 3

Archive Link: https://archive.ph/1Xfav

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

அபிநந்தன் பாஜக ஆதரவாளர் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மைக் குறித்து அறிய முற்பட்டோம்.

உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவும் படத்தில் காணப்படும் நபர் இந்திய விமானி அபிநந்தனாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்திய விமானப் படையில் இருப்பவர்கள் எந்த ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும் இருக்கக் கூடாது என்பது ஒரு முக்கிய விதியாகும்.

விமானப் படையின் சட்டக் குறிப்பில் இவ்விதி இடம்பெற்றுள்ளது.

IAF Manual

முக வேறுபாடுகள்:-

வைரலாகும் படத்தில் இருக்கும் நபருக்கு அபிநந்தன்போலவே முக சாயல் இருந்தாலும், அவருக்கும் அபிநந்தனுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

அபிநந்தன் குறித்து பரவும் தகவல் குறித்த ஒப்பீடு
Left: Viral Photo, Right: IAF Pilot Abinanthan
  • வேறுபாடு 1: வைரலாகும் படத்தில் இருக்கும் நபரின் வலது புற கண்ணின் கீழ் மச்சம் ஒன்று உள்ளது. ஆனால் அம்மச்சம் அபிநந்தனுக்கு இல்லை.
  • வேறுபாடு 2: அபிநந்தனுக்கு உதட்டின் கீழ் மச்சம் உள்ளது. இது வைரலாகும் படத்தில் இருக்கும் நபருக்கு இல்லை.
  • வேறுபாடு 3: அபிநந்தனுக்கு கன்னத்தின் கீழே கோடு போன்ற ஒரு வடு உள்ளது. இது வைரலாகும் படத்தில் இருக்கும் நபருக்கு இல்லை.

மேற்குறிப்பிட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் காணும்போது, அபிநந்தன் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்று பரப்பப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது.

Conclusion

அபிநந்தன் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக கூறி, சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட புகைப்படத்தில் காணப்படும் நபர், உண்மையில் அபிநந்தனல்ல என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

IAF Manual: https://www.mod.gov.in/sites/default/files/AFrules.pdf


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular