Claim
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய காட்சி

Fact Check/Verification
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய காட்சி என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் “Space X Starship rocket booster makes perfect landing back to the Launchpad” என்று தலைப்பிட்டு அக்டோபர் 13, 2024 அன்று வைரலாகும் வீடியோவுக்கு ஒத்த மற்றொரு வீடியோ @OliLondonTV என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் இதுப்போன்று பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதை காண முடிந்தது. அதை இங்கே காணலாம்.
ஸ்பேஸ் எக்ஸ் என்பது எலன் மஸ்க்கின் ராக்கெட் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில் அக்டோபர் 13, 2024 அன்று நடத்தப்பட்ட பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டது. அப்பரிசோதனையில் விண்கலத்தை தாங்கி சென்ற ஏவுகணை விண்ணில் விண்கலத்தை செலுத்துவிட்டு, அதிலிருந்து பிரிந்து, மீண்டும் அது புறப்பட்ட இடத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்திய இப்பரிசோதனை நிகழ்வு குறித்து ஊடகங்களிலும் செய்தி வந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்த நிகழ்வே சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய நிகழ்வு என்று பரப்பப்பட்டு வருகின்றது.
Also Read: பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து விலகி விடுவேன் என்றாரா ஜெயக்குமார்?
Sources
X post by the user, @OliLondonTV, Dated October 13, 2024
Report from CNN-News18, Dated October 13, 2024
Report from India Today, Dated October 13, 2024
Report from BBC, Dated October 13, 2024