கன்டெய்னருக்குள் அலுவலகம் போன்ற அமைப்பை உருவாக்கி தமிழகத்தில் மர்ம லாரிகள் உலவுதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/78NpR
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் முடிந்தேறியது. இத்தேர்தலின் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிப்பதற்கு எதற்காக இவ்வளவு கால தாமதம் என்று பலத் தரப்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்த ஒரு மாத கால இடைவெளி வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் செய்வற்கு வழிவகுக்கும் என்று தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே கன்டெய்னருக்குள் அலுவலகம் போன்ற அமைப்பை உருவாக்கி தமிழகத்தில் மர்ம லாரிகள் சில உலவுதாக கூறி அந்த அமைப்பின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/nFJVl

Archive Link: https://archive.ph/sS2YO
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கன்டெய்னருக்குள் அலுவலகம் போன்ற அமைப்பை உருவாக்கி தமிழகத்தில் மர்ம லாரிகள் உலவுவதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, இத்தகவல் பரவக் காரணமான புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படத்தில் இருக்கும் அலுவலக அமைப்பு லாரிக்குள் ஏற்படுத்தப்பட்டது அல்ல. அது தரைப்பகுதிகளில் ஏற்படுத்தப்படும் தற்காலிக அலுவலக அமைப்பாகும். அதற்கு பெயர் போர்ட்டபிள் ஆஃபிஸ் கன்டெய்னர் (Portable Office Container) ஆகும்.


இந்த அமைப்பை நாம் தேவைப்படும் இடத்தில் உருவாக்கிக் கொள்ளலாம். இதை தேவையான இடத்திற்கு நகர்த்திக் கொள்ளவும் முடியும். இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி அலுவலகம் தவிர்த்து, வீடு, விடுதி, உணவகம், கழிவறை போன்றவையும் உருவாக்கப்படுகின்றது.




Conclusion
கன்டெய்னருக்குள் அலுவலகம் போன்ற அமைப்பை உருவாக்கி தமிழகத்தில் மர்ம லாரிகள் உலவுதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misplaced Context
Our Sources
India Mart:-
S.K.Containers:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)