வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2021
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2021
HomeFact Checksவாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் அதிமுக பட்டனை அழுத்துங்கள் என்றாரா ஸ்டாலின்?

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் அதிமுக பட்டனை அழுத்துங்கள் என்றாரா ஸ்டாலின்?

வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி எதுவும் செய்துவிடுவார்கள் என்பதால் முதலில் இரட்டை இலைக்கு வாக்களித்து சத்தம் வருகிறதா என்று சோதித்து பார்த்த பின் திமுகவிற்கு வாக்களிக்கவும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகப் புகைப்படம் ஒன்று வைரலாகிறது.

வாக்குப்பதிவு
Source: Facebook

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதியான இன்று தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தலைவிதியை தீர்மானிக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் காலை 7 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவு நாளான இன்றும் சாமனியர்களை திசை திருப்பும் வகையிலான போலிச்செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அப்படியாக, “வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்துவிடுவார்கள் என்பதால் முதலில் இரட்டை இலைக்கு வாக்களித்து சத்தம் வருகிறதா என்று சோதித்து பார்த்த பின் திமுகவிற்கு வாக்களிக்கவும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததாகப் செய்திப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

வாக்குப்பதிவு
Source: Facebook
வாக்குப்பதிவு
Source: Facebook

Archived link: https://archive.ph/lTVbL

வாக்குப்பதிவு
Source: Facebook

Archived Link: https://archive.ph/SPSFY

வாக்குப்பதிவு
Source: Facebook

Archived Link: https://archive.ph/itc5k

Twitter Archived Links: https://archive.ph/yz6AO / https://archive.ph/8WMbs

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் அதிமுகவிற்கு ஸ்டாலின் வாக்களித்து சோதனை செய்யச் சொன்னதாகப் பரவும் நியூஸ்கார்டு பாலிமர் செய்திகள் செய்திப் புகைப்படத்தில் பரவுகிறது.

எனவே, பாலிமரின் அதிகாரப்பூர்வ செய்தி சமூக வலைத்தளத்தில் இதுபோன்ற புகைப்படம் வெளியாகியுள்ளதா என்று சோதனை செய்தோம். ஆனால், அப்படி எவ்வித நியூஸ்கார்டும் அவர்களால் வெளியிடப்படவில்லை.

மேலும், பாலிமரில் பயன்படுத்தப்படும் நியூஸ் கார்டில் இருந்து வைரலாகும் நியூஸ் கார்டு பெரிதும் வேறுபட்டு இருந்தது.

Polimer News card for Just In news

எனவே, பாலிமர் நியூஸைச் சேர்ந்த தினேஷ் அவர்களை தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டபோது ஸ்டாலின் இதுபோன்று சொல்லவில்லை என்பதும்; குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியாகப் பரவுவதும் நமக்குத் தெரிய வந்தது.

Conclusion:

வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிமுகவிற்கு வாக்களித்து சோதனை செய்துவிட்டு திமுகவிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என ஸ்டாலின் சொன்னார் என்பது போல பரவும் புகைப்படம் போலியானதாகும் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்

Result: False

Our Sources

Polimer news

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular