ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகர்நாடகாவில் மதுவும், கோழியும் கொடுத்து ஓட்டு கேட்கும் பாஜக என்று பரவும் தெலுங்கானா வீடியோ!

கர்நாடகாவில் மதுவும், கோழியும் கொடுத்து ஓட்டு கேட்கும் பாஜக என்று பரவும் தெலுங்கானா வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கர்நாடகாவில் மதுவும், கோழியும் கொடுத்து ஓட்டு கேட்கும் பாஜக
Fact: வைரலாகும் வீடியோ தெலுங்கானாவில் TRS கட்சி சார்பில் எடுக்கப்பட்டதாகும்.

கர்நாடகாவில் மதுவும், முழுக்கோழியும் கொடுத்து வாக்காளர்களிடம் ஓட்டு கேட்கும் பாஜக என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”கர்நாடகா தேர்தல் களத்தில், அண்ணாமலை வேட்பாளரின் வாக்கு கேட்கும் லட்சணத்தைப் பாருங்கள்.இவர்கள் தான் ஊழல் ஒழிக்க பிறந்தவர்களாம்” என்று அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

Screengrab from Facebook/npeermaraikayar
Screengrab from Facebook/xavier.raj.940
Screengrab from Facebook/sshajahanps

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: VIP Bags மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டதா?

Factcheck / Verification

கர்நாடகாவில் மதுவும், கோழியும் கொடுத்து ஓட்டு கேட்கும் பாஜக என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ஃப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தபோது, கடந்த அக்டோபர் 04, 2022ல் TRS கட்சியைச் சேர்ந்த Rajanala Srihari என்பவர் K.சந்திரசேகர ராவ் மற்றும் K.T.ராமா ராவ் கட் அவுட்களுடன் மக்களுக்கு தசரா பண்டிகையை ஒட்டி முழுக்கோழியும், மதுவும் வழங்கிய காட்சி என்று வெளியாகிய செய்திகள் நமக்குக் கிடைத்தன.

TRS கட்சியை தேசிய அளவிலான கட்சியாக தரம் உயர்த்திய சந்திரசேகர ராவ், அதன் பெயர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்கிற நிலையில் ஸ்ரீஹரி, இந்த இலவச மது மற்றும் கோழியை மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவித்திருந்தது.

இதுகுறித்த செய்திகளில் கோழி மற்றும் மது வழங்கும் வீடியோ காட்சியும் இடம் பெற்றிருந்தது. தற்போது வைரலாகும் வீடியோ காட்சியும், இதுவும் ஒன்று என்பது நமக்கு இதன்மூலமாக உறுதியாகியது.

TRS கட்சியை தேசிய கட்சியாக மாற்றுவதாக அறிவித்திருந்த தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ், 2022ல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) என்கிற அவரது கட்சியின் பெயரை தேசிய கட்சியாக பாரத் ராஷ்டிய சமிதி (BRS) என்று பெயர் மாற்றி அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக பரவும் பொய் தகவல்!

Conclusion

கர்நாடகாவில் மதுவும், கோழியும் கொடுத்து ஓட்டு கேட்கும் பாஜக என்று பரவும் வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, The Indian Express, Dated October 05, 2022 News Article From, ABP, October 04, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular