Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உரிமைக்கோரல்
ஜெயலலிதாவும் நிர்மலா சீதாராமனும்.
சரிபார்ப்பு
தற்காலத்தில் நமக்கு அதிகமாகப் பரிட்சயப்பட்டவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பல அரசியல் தலைவர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாட்டில் பிறந்த அற்புதமான பெண் தலைவர்களில் ஒருவர் தமிழ் நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. சமீபத்தில், புடவை அணிந்திருந்த இரண்டுப் பெண்களின் கருப்பு வெள்ளைப் புகைப்படம் வைரலாகியது. படத்தில் உள்ள இரண்டுப் பெண்கள் ஜெயலலிதா மற்றும் நிர்மலா சீதாராமன் என்று கூறப்பட்டது.
“ஜெயலலிதா வித் நிர்மலா சீதாராமன்” என்ற தலைப்பில் பலர் இதைப் பகிர்ந்து உள்ளனர் .
இதன் உண்மைத் தன்மையை நியூஸ்செக்கரில் கண்டறியத் தொடங்கினோம்.
உண்மைத்தன்மை:
வைரல் புகைப்படத்தை ரிவெர்ஸ் இமேஜில் தேடுகையில் ஜெயலலிதா உடன் இருப்பவர் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி என்பதுத் தெரிய வந்ததது . ஜெயலலிதா பிப்ரவரி 24, 1948 இல் பிறந்தவர், நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 18, 1959 இல் பிறந்தார். இருவருக்குமான வயது இடைவெளி 10 வருடங்கள் ஆகும்.
சிவசங்கரி மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருவருக்குமான உறவு அனைவரும் அறிந்ததே . ஜெயலலிதா மற்றும் சிவசங்கரி ஆகிய இருவருக்கும் எழுத்து மற்றும் நடனத்தில் ஆர்வம் அதிகம். ஜெயலலிதா பற்றியப் பல உண்மையான விஷயங்களை சிவசங்கரி அவர்கள் ஊடகங்களில் பகிர்ந்து உள்ளார் .
சிவசங்கரியின் சமீபத்தியப் படங்களுடன் ஒப்பிடும்போது, பல ஒற்றுமைகள் காணப்பட்டன.
நிர்மலா சீதாராமனின் பழையப் புகைப்படத்தையும் வைரல் புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, வைரல் புகைப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது.
எனவே வைரல் புகைப்படத்தில் இருப்பவர் எழுத்தாளர் சிவசங்கரி என்பது உறுதியாகிறது.
For The Love of sari என்ற இணையதளத்தில் பிரபலத் தமிழ் எழுத்தாளர் சிவசங்கரியுடன் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இணைந்து எடுத்த புடவை விளம்பரப் புகைப்படத்தைக் காணலாம் .
முடிவுரை
எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் ஜெயலலிதாவின் புகைப்படத்தில் இருக்கும் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி என்றும் நிர்மலா சீதாராமன் இல்லை என்பதும் தெரியவந்து உள்ளது .இது போன்ற தவறானக் கருத்துக்களைப் பரப்புவதால் மக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது .
Sources
Result: FALSE
(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 2, 2025
Ramkumar Kaliamurthy
May 29, 2025
Ramkumar Kaliamurthy
April 16, 2025