Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
துபாய் அஜ்மான் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

துபாயிலிருந்து ஏறக்குறைய 45 கி.மீ தொலைவில் உள்ளது அஜ்மான் நகரம். இந்நகரில் உள்ள மார்க்கெட்டில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) அன்று மாபெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
கொரானா பாதிப்புக் காரணமாக இந்த மார்க்கெட் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக இவ்விபத்துக் காரணமாக எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
இதுக்குறித்து UAE வெப் தமிழ் இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்சமயம் பரவி வருகிறது.
இதன் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை முழுமையாக ஆராய்ந்தப்பின் இதுக்குறித்த உண்மைகளை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோவானது, அஜ்மான் நகர மார்க்கெட் தீ விபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை. இவ்வீடியோவானது எகிப்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எடுக்கப்பட்டதாகும்.
கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி, எகிப்து நாட்டின் கெய்ரோ-இஸ்மாலியா நெடுஞ்சாலையில் உள்ள குரூட் ஆயில் பைப் லைனில் கசிவு ஏற்பட்டு மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது வைரலாகி வருகிரது.
இவ்விபத்துக் குறித்த செய்திப் பல இணையத் தளங்களில் வெளிவந்திருந்தது.

மேலும் “egypt fire” என்ற கீவேர்டைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.

இதில் வைரலான வீடியோ ஜூலை 16 ஆம் தேதியே எகிப்து தீ விபத்து என்று யூடிபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. ஆனால் அஜ்மான் மார்க்கெட் தீ விபத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதிதான் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
நம் விரிவான விசாரணைக்குப்பின் வைரலான வீடியோவில் காணப்படும் வீடியோவானது எகிப்து தீ விபத்தில் பிடிக்கப்பட்டது என்பதும் துபாய் தீ விபத்தில் பிடிக்கப்பட்டது அல்ல என்பதும் நமக்குத் தெளிவாகிறது.
Facebook Profle: https://www.facebook.com/watch/?v=1552504661618728
UAE Web Tamil: https://www.uaetamilweb.com/news/ajman-market-fire/
YouTube: https://www.youtube.com/watch?v=-D5HlrQdt9A
YouTube: https://www.youtube.com/watch?v=cxs-b09lnBo
Al Monitor.Com: https://www.al-monitor.com/pulse/originals/2020/07/egypt-pipeline-fire-cairo-highway-blaze.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 12, 2023
Ramkumar Kaliamurthy
August 13, 2020
Ramkumar Kaliamurthy
February 19, 2021