Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: ஓடாத ரயிலை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்த ராணுவ ஜவான்கள்
Fact: வைரலாகும் வீடியோ தகவல் தவறாகப் பரவுகிறது.
ஓடாத ரயிலை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்த ராணுவ ஜவான்கள் என்று வீடியோ செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்வதெல்லாம் இதுவரை எந்த ஆட்சியாளர்களும் செய்யாத சாதனையே..நன்றி மோடி ஜி” என்றும், வேறு சில பதிவுகளுடன் இந்த வீடியோ செய்தி பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் வதந்தி!
Fact Check/Verification
ஓடாத ரயிலை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்த ராணுவ ஜவான்கள் என்று பரவும் வீடியோ செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ஃப்ரேம்களாகப் பிரித்து அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், தெலுங்கானா ஃபலுக்னுமா எக்ஸ்பிரஸ் தீவிபத்துக்கு உள்ளான நிலையில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது நமக்குத் தெரிய வந்தது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து தெலுங்கானாவின் செகந்திராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த ஃபலுக்னுமா எக்ஸ்பிரஸ் S4 மற்றும் S5 என்கிற இரண்டு பெட்டிகளில் தீப்பிடித்தது. தீ பரவுவதை கவனித்து நிறுத்துவதற்குள் 6 பெட்டிகளில் தீ பரவி விட்டது.
இதனையடுத்து ரயிலின் மற்ற பெட்டிகளை தீவிபத்திலிருந்து காப்பாற்ற புதிய எஞ்சின் வரவழைக்கப்பட்ட நிலையில், அதுவரை காத்திருக்காமல் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மற்றும் மக்கள் இணைந்து மற்ற பெட்டிகளை தீவிபத்துக்கு உள்ளான பெட்டிகளின் இருந்து பிரித்துள்ளனர். இதனால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டதாக PIB தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஓடாமல் நின்ற ரயில் தள்ளிவிடப்பட்டதாகப் பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்து ரயில்வே செய்தித்தொடர்பாளர் மற்றும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், தீவிபத்துக்கு உள்ளான பெட்டிகளில் இருந்து மற்ற பெட்டிகளைப் பிரிக்கும் நடவடிக்கையிலேயே ராணுவ வீரர்களும் மக்களும் ஈடுபட்டனர்; ஓடாத ரயில் பெட்டிகளை அவர்கள் தள்ளிவிடவில்லை என்பது உறுதியாகிறது.
Conclusion
ஓடாத ரயிலை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்த ராணுவ ஜவான்கள் என்று பரவும் வீடியோ செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video From, RTV, Dated July 07, 2023
Twitter Post From, PIB, Dated July 10, 2023
Twitter Post From, South Central Railway, Dated July 10, 2023
Twitter Post From, Spokesperson Railways, Dated July 10, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.