Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திப்பு சுல்தானின் உண்மையான படம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களில் சாதி மற்றும் மத ரீதியான பதிவுகள் மிகவும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக தேசத் தலைவர்களையும் வரலாற்று வீரர்களையும் குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சாதிக்கோ உரிய அடையாளமாகவோ மாற்றி அவர்கள் குறித்து அவதூறு பரப்பும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
இந்த வரிசையில் புகைப்படம் ஒன்று தற்போது பரப்பப்பட்டு வருகின்றது. அதில் உண்மையான திப்பு சுல்தான் படம், காங்கிரஸ் பள்ளி புத்தகங்களில் அச்சிட்ட படம் என்று இரண்டு படங்கள் காணப்படுகின்றது. இப்படத்தை ராஜா லாசர் என்பவர், “இவ மூஞ்சிக்கு கறிகடை வச்சா கூட எவனும் கறி வாங்க வரமாட்டா இதுல இவன் பெரிய மன்னராம்” என்று தலைப்பிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (03/08/2021) அன்று தனது ஃபேஸ்புக் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பதிவை இதுவரை 328 பேர் லைக் செய்தும், 215 பேர் ஷேர் செய்தும், 32 பேரும் கமெண்ட் செய்தும் உள்ளனர். இவரைத் தவிர்த்து மேலும் சிலரும் இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுகுறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அதிகம் பொய் பேசும் நபராக அருணன் முதலிடம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் படத்தில் இருப்பவர் திப்பு சுல்தான அல்ல, அவர் கிழக்கு ஆப்பிரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த திப்பு திப் என்பவர் என தெரிய வந்தது.
திப்பு திப் வாழ்க்கை குறித்து ஸ்டூவர்ட் லேங் என்பவர் “திப்பு திப்: ஐவரி, ஸ்லேவரி, அண்ட் டிஸ்கவரி இன் தி ஸ்க்ராம்ப்ள் ஃபார் ஆப்ரிக்கா“ (Tippu Tip: Ivory, Slavery, and Discovery in the Scramble for Africa) என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் திப்பு திப்பின் படத்தைதான் திப்பு சுல்தான் படம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு புலனாகின்றது.
இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு படத்தை திப்பு சுல்தான் படம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதுகுறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து அது வதந்தி என்று நிரூபித்திருந்தோம்.
அச்செய்தியைப் படிக்க: லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் திப்பு சுல்தான் புகைப்படம் என்று பரவும் வதந்தி!
திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் அவருடையது அல்ல என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Sabloo Thomas
May 27, 2025
Ramkumar Kaliamurthy
May 27, 2025
Ramkumar Kaliamurthy
December 20, 2024