Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
வேளாண் போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக டிராக்டர் பேரணி குடியரசு தினமான நேற்று (26/01/2021) டெல்லியில் நடைப்பெறவிருந்தது.
இப்பேரணியை தடுத்து நிறுத்த போலீசார்கள் முற்பட்டதால், இது மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விவசாயி இறப்பிற்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் காரணமென்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.
தலைநகர் டெல்லியில் புதிதாக கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வந்தனர். போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முடிவெடுத்திருந்தனர்.
இப்பேரணியை போலீசார் தடுத்தி நிறுத்தியதால் மாபெரும் கலவரமாக உருவெடுத்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நவ்நீத் சிங் எனும் விவசாயி உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
டிராக்டர் பேரணியில் போலீசார் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டால் விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து தீவிரமாக தேடினோம்.
நம் தேடலில், டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் மரணம் குறித்த CCTV பதிவு வீடியோ ஒன்றை ANI தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது . இந்த வீடியோ டெல்லி போலீசார் வெளியிட்டதாக ANI குறிப்பிட்டிருந்தது.
இவ்வீடியோவைக் காணும்போது டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகிறது. அவரது டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்ததாலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
தி இந்து, நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்களும் இதை செய்தியாக வெளியிட்டுள்ளன.
டெல்லி டிராக்டர் பேரணியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Profile: https://twitter.com/shafeeqkwt/status/1353991430826553346
Twitter Profile: https://twitter.com/AK_THALA_3/status/1354027833861922817
ANI: https://twitter.com/ANI/status/1354061159784095744
The Hindu: https://www.thehindu.com/news/cities/Delhi/protester-dies-as-tractor-overturns/article33668612.ece
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 6, 2024
Ishwarachandra B G
February 27, 2024
Vasudha Beri
February 26, 2024