Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக பரவும் படம்.
Fact: வைரலாகும் படம் Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட படமாகும். பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தலுக்காக பரேலி தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்றபோது எடுத்த படத்தை வைத்து இப்படம் எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
”அமெரிக்க தேர்தல் தேர்தலில் (சங்கி) டொனால்ட் டிரம்ப் வெற்றி!” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அப்படத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால் டிரம்ப், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் காவி வண்ணத்தில் உடை அணிந்திருப்பதாய் இருந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சால்வை போட வந்தவரிடம் ‘நிதி கொண்டு வந்தாயா’ என கேட்டாரா சீமான்?
டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் சாஹித் என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. “What if Donald Trump and Kamala Harris were Indian politicians? See how they would campaign against each other, just like typical Indian politicians…” என்று தலைப்பிட்டு வைரலாகும் இப்படத்துடன் வேறு சில படங்களும் பகிரப்பட்டிருந்தது.
இப்படங்கள் ஃபோட்டோஷாப் மற்றும் Ai தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டதாக அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படங்களை உருவாக்க தேவைப்பட்ட படங்கள் கூகுளில் பெறப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் ‘தி கேரவன்’ ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் படம் உருவாக்க பயன்படுத்தப்பட்ட படம் நமக்கு கிடைத்தது.
கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பரேலி தொகுதியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படத்தை இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு பதிலாக டொனால்ட் டிரம்பின் உருவமும், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலாக எலான் மஸ்க்கின் உருவமும் Ai தொழில்நுட்ப உதவியுடன் மாற்றப்பட்டுள்ளது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படததியும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
Also Read: இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினாரா உதயநிதி ஸ்டாலின்?
டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக பரவும் படம் Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட படமாகும். பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தலுக்காக பரேலி தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்றபோது எடுத்த படத்தை வைத்து இப்படம் எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்ந்து தேடுகையில் டிரம்பும் எலான் மஸ்க்கும் காவி உடையில் இருப்பதாக மற்றொரு படம் வைரலாவதை காண முடிந்தது.
இப்படம் சாஹித் பகிர்ந்திருந்த படங்களில் ஒன்றாக இருந்ததை காண முடிந்தது.
இப்படமானது பிரதமரும் யோகி ஆதித்யநாத்தும் வாரணாசியில் ரோட் ஷோ சென்றபோது எடுக்கப்பட்ட படத்தை கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அந்த உண்மையான படத்தை ரவி சௌத்ரி எனும் புகைப்பட பத்திரிக்கையாளர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக பரவும் இப்படமும் Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட படம் என உறுதியாகின்றது.
Our Sources
Instagram Post from the user, sahixd, Dated November 02, 2024
X Post from The Caravan, Dated May 09, 2024
Instagram Post from Ravi Choudhary, Photo Journalist, Dated May 13, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Vijayalakshmi Balasubramaniyan
May 27, 2025
Vijayalakshmi Balasubramaniyan
November 8, 2024
Ramkumar Kaliamurthy
November 8, 2024