Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அமுல் நிறுவனம் டிரம்பின் வரி விதிப்பை கிண்டல் செய்ததாக பரவும் விளம்பரம்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Also Read: மதுரை தவெக மாநாடு பற்றி பேச மறுத்த விஜய் தந்தை SAC என்ற வீடியோ தகவல் உண்மையா?
அமுல் நிறுவனம் டிரம்பின் வரி விதிப்பை கிண்டல் செய்து விளம்பரம் செய்ததாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
முன்னதாக அமுல் நிறுவனம் அமெரிக்க வரிவிதிப்பு குறித்து விளம்பரம் ஏதும் செய்ததா என தேடினோம். அத்தேடலில் அமெரிக்க வரிவிதிப்பு குறித்து அமுல் நிறுவனம் கார்ட்டூன் வடிவில் மும்பையில் விளம்பரம் செய்ததாக கெட்டி இமேஜஸ் இணையத்தளத்தில் காணப்படும் படம் வாயிலாக அறிய முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் அமுலின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இதே விளம்பரப்படம் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

ஆனால் இந்த விளம்பரப்படம் வைரலாகும் விளம்பரப் படத்திலிருந்து மாறுபட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் படம் குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம். அத்தேடலில் Marketing Maverick எனும் எக்ஸ் பக்கத்தில் “As US President Donald Trump doubled down on tariffs on Indian goods to 50%” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: தவெக தலைவர் விஜய் தரம் தாழ்ந்து பேசி வருகின்றார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?
இப்படத்தை வைரலாகும் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என தெளிவானது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.

Sources
Getty Images Website
Instagram post by Amul, dated April 4, 2025
X post by Marketing Maverick, dated August 7, 2025
இத்தகவலானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே ஃபேக்ட் செக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்.
Vijayalakshmi Balasubramaniyan
May 27, 2025
Vijayalakshmi Balasubramaniyan
November 8, 2024
Ramkumar Kaliamurthy
November 7, 2024