சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024
சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

HomeFact Checkதுருக்கியில் அரிதாக மலரும் ”யோகி மலர்” என்று பரவும் AI புகைப்படம்!

துருக்கியில் அரிதாக மலரும் ”யோகி மலர்” என்று பரவும் AI புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: துருக்கியில் மலர்ந்த அரிதான யோகி மலர்
Fact: வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

துருக்கியில் மலர்ந்த அரிதான யோகி மலர் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“யூப்ரடீஸ் நதியின் நீரால் உண்ணப்படும் இயற்கையான யோகி மலர்கள் வளரும் உலகின் ஒரே இடம் துருக்கி. உர்ஃபா மாகாணத்திற்கு அருகிலுள்ள தென்கிழக்கு Şanl ıurfa மாகாணத்தில் உள்ள Halfeti கிராமத்தில் மட்டுமே மிகவும் அரிதான வகை மலர். அவை கோடையில் கருப்பாகவும், மற்ற பருவங்களில் மிகவும் அடர் சிவப்பு நிறமாகவும் இருக்கும். இந்த வகை மண்ணின் அடர்த்தி மற்றும் அந்தோசயினின்கள், நீரில் கரையக்கூடிய நிறமிகளின் கலவையால் வழங்கப்படுகிறது; மண் இந்த வகை நிறமியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இது hp க்கு மிகவும் உணர்திறன் கொண்டது” என்று இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

Screenshot from Facebook//trichi.swaminathan

Facebook Link/Archived Link

துருக்கியில்
Screenshot from Facebook/harshithanjali

Facebook Link/Archived Link

Screenshot from Facebook/SakthiRaja

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?

Fact Check/Verification

துருக்கியில் மலர்ந்த அரிதான யோகி மலர் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படம் குறித்து அறிய முதலில் துருக்கி, யோகி மலர் உள்ளிட்ட கீ-வேர்டுகளால் தேடினோம். ஆனால், அதுதொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும், வைரல் பதிவில் அந்த மலர் வெயில் காலத்தில் கருமை நிறமாகவும் மற்ற காலங்களில் அடர் சிவப்பு நிறத்திலும் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வைரல் புகைப்படத்தில் அப்படிப்பட்ட நிறங்கள் இடம்பெற்றிருக்கவில்லை.

எனவே, வைரல் புகைப்படத்தை நாம் AI Hive Moderation மூலமாக ஆராய்ந்தோம். அதன்முடிவில், இப்புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது 99.9% உறுதியானது. மேலும், மற்றொரு டூலான Illuminarty மூலமும் இப்புகைப்படம் 98.1% AI மூலமாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை உறுதி செய்யப்பட்டது.

Halfeti என்று இந்தப்பதிவில் குறிப்பிட்டிருக்கப்படும் துருக்கி கிராமம், Arab Bride மற்றும் Arab Beauty என்று வர்ணிக்கப்படும் கருப்பு நிற ரோஜா மலருக்கு பெயர் போனதாகும்.

மொட்டாக இருக்கும்போது கருப்பு நிறமாக இருக்கும் இந்த பூக்கள், முழுமையாக மலரும் போது வைன் சிவப்பு நிறம் அதன் இதழ்களில் காணப்படும். குறிப்பிட்ட மலர் தவிர யோகி மலர் என்று ஒன்று துருக்கியில் இதே போன்று பூப்பதாக எந்த ஆதாரமும் இல்லை.

Also Read: கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினாரா?

Conclusion

துருக்கியில் மலர்ந்த அரிதான யோகி மலர் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Sources
AI Hive Moderation Website
Illuminarty Website
Hugging Face Website

(இக்கட்டுரை முன்னதாக NewsChecker ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular