Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மகாராஷ்டிராவில் நீதிபதியும் வக்கீலும் சண்டையிட்டதாக பரவும் வீடியோ.
சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: கோத்ரா ரயில் எரிப்பில் தொடர்புடைய ரஃபீக் உசேன் பதுக் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
மகாராஷ்டிராவில் நீதிபதியும் வக்கீலும் சண்டையிட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் @bnb_legal என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் அக்டோபர் 29, 2022 அன்று இதே வீடியோ பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள கஸ்கஞ்ச் குடும்பநல நீதிமன்றத்தில் ஒரு தம்பதிக்காக வழக்காட வந்த இருத்தரப்பு வக்கீல்களும் நீதிமன்ற வளாகத்தில் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்துக்கொண்டதாக அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் தி பிரிண்ட் ஊடகத்தில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியிலும் இச்சண்டை கஸ்கஞ்ச் நீதிமன்றத்தில் இரு வக்கீல்களுக்கு இடையே நடைப்பெற்றதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, லோக்சட்டா, உள்ளிட்ட ஊடகங்களில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியிலும் மேற்கண்ட அதே தகவலே தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read: கீழ்சாதியை சார்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் மேல்சாதியினரால் தாக்கப்பட்டாரா?
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் மகாராஷ்டிராவில் நடக்கவில்லை; உத்திரப்பிரதேசத்தில் நடந்தது என தெளிவாகின்றது. அதேபோல் வீடியோவில் காணப்படும் சண்டை இரண்டு வக்கீல்களுக்கு இடையே நடந்ததாகும்; நீதிபதிக்கும் வக்கீலுக்கும் இடையே நடந்ததல்ல.
Sources
Tweet by B&B Legal on October 29,2022
News report by the Print on October 29,2022
News report by the Times of India on October 29,2022
News report by the Loksatta on October 30,2022
Ramkumar Kaliamurthy
July 4, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 24, 2025