Claim: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து கேலியாக வீடியோ வெளியிட்ட நியூஸ் 7 தமிழ்
Fact: வைரலாகும் வீடியோ போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தவுடனேயே கட்சியில் சேர்ந்ததாக கேலி செய்த நியூஸ் 7 தமிழ் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தமிழ்நாடு துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் குறித்து கேலிக்குரிய வகையில் News 7 Tamil வீடியோ வெளியிட்டதாக ”*உதயநிதி துணை முதலமைச்சர் ஆன கதை…நியூஸ் 7 தமிழ் வச்சு செஞ்சுவிட்டான்” சமூக வலைத்தளப்பதிவு ஒன்று பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெங்களூருவில் கோலத்தை அழித்த பெண் வேற்று மதத்தவர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
உதயநிதி ஸ்டாலின் பிறந்தவுடனேயே கட்சியில் சேர்ந்ததாக கேலி செய்து வீடியோ வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ளதாக அதன் லோகோ இடம்பெற்றிருந்த நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “உதயநிதி காலம் உதயம்” என்கிற வீடியோவே இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, அவர்களுடைய அதிகராப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தபோது, “இந்த செய்தியையும், வீடியோவையும் நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்துள்ளனர்.
இதுகுறித்து, நியூஸ் 7 தமிழ் ஆசிரியரான சுகிதா சாரங்கராஜை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “வைரலாகும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை. எங்களுடைய பழைய வீடியோவை எடுத்து அதனை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர்” என்று விளக்கமளித்தார்.
Also Read: திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சுத்தம் செய்தாரா பவன் கல்யாண்?
Conclusion
உதயநிதி ஸ்டாலின் பிறந்தவுடனேயே கட்சியில் சேர்ந்ததாக கேலி செய்து வீடியோ வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் என்று பரவும் வீடியோ போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
X Post From, News 7 Tamil, Dated September 30, 2024
Phone Conversation with, Sugitha Sarangaraj, Editor, News 7 Tamil
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)