பசுக்களுக்கு அவற்றின் புனிதத்தன்மையைக் கருத்தில் கொண்டு அவற்றிற்கு இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படுகிறது; அவற்றின் சுற்றுலாவிற்கு யோகி ஆதித்யநாத் தலைமையில் குழு அமைக்கப்படும் என்பதாக மத்திய பட்ஜெட் 2022ல் நிர்மலா சீத்தாராமன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

2022 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அம்சங்களை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தனது பட்ஜெட் உரையில் அவர், “அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளம் இந்த பட்ஜெட்” என்று தெரிவித்திருந்தார். எனினும், எளிய தரப்பினருக்கான எந்தவித வழிவகையும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பதாக பல்வேறு தரப்பு விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், “புனிதமாக கருதப்படும் கோமாதாவான பசு மாடுகளுக்கும் இனி இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் பசுமாடுகளை சுற்றுலா அழைத்து செல்ல யோகி ஆதிநாத் தலைமையில் குழுவும் அமைக்கப்படுகிறது.” என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
கார்த்திக் சுப்புராஜ் என்பவர் இதனை ட்விட்டரில் பதிவிட்டு, குறிப்பிட்ட அறிவிப்பு உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். பேஸ்புக்கிலும் இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரதமர் நரேந்திர மோடி மனைவி ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தாரா?
Fact check/Verification
பசுக்களுக்கு இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டு, புதியதலைமுறையின் செய்தி வடிவில் பரவியதால் முதலில் அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் ஆய்வு செய்தோம்.
அப்போது, “நவீன தொழில்நுட்பத்துடன் சிப் பொருத்திய இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும்” என்று வெளியாகியிருந்த நியூஸ் கார்டினை எடிட் செய்தே குறிப்பிட்ட வைரல் கார்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியானது.


Fake Card

Original Card
தொடர்ந்து இதனை உறுதி செய்ய புதியதலைமுறை டிஜிட்டல் ஹெட் கார்க்கி பவாவை தொடர்பு கொண்டோம். அப்போது அவர், பசுக்களுக்கு இ-பாஸ்போர்ட் என்று பரவும் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று நமக்கு உறுதி செய்தார்.
மத்திய பட்ஜெட் 2022ன் சாரம்சத்தை இங்கே முழுவதுமாக இணைத்துள்ளோம்.
Conclusion
பசுக்களுக்கு இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)