மும்பையில் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்து வரும் நிலையில், மும்பை மழை குறித்த தவறான செய்திகளும் சமூக ஊடகங்களில் பரவி வருவதை காண முடிந்தது. அவற்றை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்து அதுகுறித்த உண்மையை கீழே தெளிவுப்படுத்தியுள்ளோம்.
Claim 1
மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயில் பகுதியில் கடுமையான கடல் சீற்றம் என்று பரவும் வீடியோ.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Fact
வைரலாகும் இவ்வீடியோ குறித்து தேடுகையில் The Global Exhibition எனும் யூடியூப் பக்கத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு ஜூலை 23, 2021 அன்றே இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் வேறு சில யூடியூப் பக்கங்களில் 2021 ஜூலை மாதத்திலேயே வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும், அண்மை மும்பை மழைக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகின்றது. இவ்வீடியோ நான்கு வருடங்களுக்கு முன்பே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது.
Also Read: ராகுல் காந்தியின் பீகார் யாத்திரைக்கு கூடிய கூட்டமா இது?
Sources
YouTube Video from The Global Exhibition, dated July 23, 2021
YouTube Video from NS NOW, dated May 19, 2021
YouTube Video from DJWebSolutions, dated May 18, 2021
Claim 2
மும்பை விமான நிலையத்தில் நீர் புகுந்துள்ளதாக பரவும் வீடியோ.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Fact
வைரலாகும் இவ்வீடியோ குறித்து தேடுகையில் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் எக்ஸ் பக்கத்தில் டிசம்பர் 4, 2023 அன்று இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. தமிழ்நாட்டில் மிச்சாங் புயல் தாக்கியபோது சென்னை விமான நிலையம் நீரால் சூழ்ந்ததாக அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இதே தகவலுடன் இதே வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும், மும்பை மழைக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகின்றது. 2023 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையத்துற்குள் நீர் சூழந்த வீடியோவே இவ்வாறு பகிரப்படுகின்றது.
Also Read: மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை காவல்துறையினர் இழுத்துச் சென்றதாக பரவும் வீடியோ உண்மையா?
Sources
Media Report by PTI, dated December 4, 2023
Media Report by Times of India, dated December 4, 2023
Media Report by Times Now, dated December 4, 2023
Claim 3
இளைஞர் ஒருவர் மும்பை சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேட்டிங் செய்தார்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Fact
வைரலாகும் இவ்வீடியோ குறித்து தேடுகையில் NDTV எக்ஸ் பக்கத்தில் ஜூன் 8, 2024 அன்று இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. புனே நகரத்தில் சாலையில் ஓடிய மழை நீரில் இளைஞர் ஒருவர் ஸ்கேட்டிங் செய்ததாக அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் இந்தியா டுடே, நியூஸ் 18, உதயவாணி உள்ளிட்ட ஊடகங்களிலும் இதே தகவலுடன் இதே வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும், மும்பை மழைக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகின்றது. 2024 ஆம் ஆண்டில் புனே நகரத்தில் மேற்கண்டவாறு பரப்பப்படுன்றது.
Sources
Media Report by PTI, dated June 8, 2024
Media Report by India Today, dated June 8, 2024
Media Report by News 18, dated June 8, 2024
Media Report by Udayavani, dated June 10, 2024