Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வைரலாகும் வீடியோ கடந்த வருடம் சிகாகோவில் எடுக்கப்பட்டதாகும்.
ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
”இன்பச்சுற்றுலா இனிதே ஆரம்பம் இடம் பெர்லின், ஜெர்மனி.” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மதுரை தவெக மாநாடு பற்றி பேச மறுத்த விஜய் தந்தை SAC என்ற வீடியோ தகவல் உண்மையா?
ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த செப்டம்பர் 04, 2024 அன்று Tamil Nadu CM MK Stalin Rides Bicycle alongside beach in Chicago, USA என்று இந்த வீடியோ HW News English X பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.
தொடர்ந்து, நம்முடைய தேடலில் கடந்த செப்டம்பர் 04, 2024 அன்றே சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் இந்த வீடியோ ”CM M.K.Stalin enjoyed cycling in Chicago” என்று பகிரப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட அவரது அமெரிக்க பயணத்துடன் தொடர்புடைய வீடியோவே தற்போது ஜெர்மனியில் அவர் சைக்கிள் ஓட்டியதாக பரப்பப்படுகிறது.
Also Read: பிரதமர் மோடிக்கு சீனா மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தாக பரவும் படம் உண்மையானதா?
ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By, HW News English, Dated September 04, 2024
YouTube Video By, Sun News Tamil, Dated September 04, 2024