Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நகைச்சுவை நடிகர் வடிவேலு பாஜகவில் இணையவிருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.

தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு இடத்தை உடையவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று அழைக்கப்படும் இவரை ரசிக்காதவர்களே கிடையாது.
தமிழ் திரை உலகில் நகைச்சுவையில் முடி சூடா மன்னனாக விளங்கிய வடிவேலு அவர்களின் திரைப்பயணம் 2011 ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் ஆட்டம் கண்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மேல் இருந்த பகையின் காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – தேமுதிக கட்சிகளுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார் வடிவேலு.
ஆனால் 2011 ஆம் தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி அமோக வெற்றியடைந்து அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்க்கட்சியாகவும் மாறியது. இவர் ஆதரித்துப் பிரச்சாரம் செய்த திமுகவுக்கு வழக்கமாக கிடைக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.
இதன்பின் வடிவேலுவின் திரை வாழ்வு மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. வடிவேலுவை வைத்து படம் எடுத்தால், ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம் எனும் அச்சத்தில் தமிழ் திரைத்துறையினர் அவரை ஒதுக்க தொடங்கினர்.
இதன் காரணமாக கடந்த ஒன்பது ஆண்டுகளில் வடிவேலுவின் நடிப்பில் வெளிவந்த படங்கள் சொற்பம் மட்டுமே. இந்நிலையில் தற்போது இவர் பாஜகவில் இணையவிருப்பதாகச் செய்தி ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பரவி வரும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
வடிவேலு அவர்கள் பாஜகவில் இணையவிருக்கிறார் என்று பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்துத் தேடினோம்.
அவ்வாறுத் தேடியதில் நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்ட செய்தி ஒன்றைக் காண முடிந்தது.
அதில்,
“ நான் பாஜகவில் இணையப் போவதாக வரும் செய்தி இறந்து புதைந்த ஒன்று”
என்று வடிவேலு அவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்தியின் மூலம் வடிவேலு அவர்கள் பாஜகவில் இணையவிருப்பதாக பரவிய செய்தி முற்றிலும் தவறானது என்று தெளிவாகிறது.
வடிவேலு அவர்கள் பாஜகவில் இணையவிருப்பதாக வந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்பது நியூஸ் செக்கர் தமிழின் விரிவான ஆய்வின் மூலம் தெளிவாக உணர்த்தியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இதுக்குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Aadhan Tamil: https://twitter.com/Aadhan_Tamil/status/1318425075620610052
I Tamil News: https://twitter.com/ITamilTVNews/status/1318444894965223424
Top Tami News: https://twitter.com/toptamilnews/status/1318240904725983233
News 18 Tamilnadu: https://twitter.com/News18TamilNadu/status/1321119474720722944
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 1, 2025
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
November 27, 2025