Fact Check
திமுக, அதிகாரம் கையில் இருப்பதால் விசிக மீது கட்டவிழ்த்து விடும் சாதிவெறியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாரா வைகோ?
திமுக கட்சியினர், கைகளில் அதிகாரம் இருக்கின்ற காரணத்தினால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் சாதி வெறியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.

சேலம், கே மோரூரில் விசிக கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கும் பிரச்சினையால், விசிக கட்சியினர் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் சிலரை கைதும் செய்தனர். இதனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
Also Read: தமிழகத்தில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 65 மட்டுமே என்று பரவும் வதந்தி!
இந்நிலையில், இதுதொடர்பாக வைகோ, “அதிகாரம் கையில் இருப்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் விசிக மேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதிவெறியை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
திமுக, அதிகாரம் கைகளில் இருக்கின்ற காரணத்தினால் விசிக மீது சாதிவெறியை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, நியூஸ் 7 வெளியிட்ட திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மதிமுக போட்டி. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு என்கிற பொருள் அடங்கிய நியூஸ் கார்டினை எடிட் செய்து குறிப்பிட்ட போலி நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.
இதனை நியூஸ் 7 தரப்பில் உறுதி செய்து கொண்டோம்.
Conclusion:
திமுக, அதிகாரம் கைகளில் இருக்கின்ற காரணத்தினால் விசிக மீது சாதிவெறியை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)