கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை ஊதி பெரிதாக்கக்கூடது என்று கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாகப் புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கோவை தனியார் பள்ளியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அவருடைய இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்ரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த வந்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி மாறிவிட்ட நிலையிலும் முந்தைய பள்ளியில் நடைபெற்ற ஆசிரியரின் இந்த ஒவ்வாத அம்மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இப்புகாரின் அடிப்படையில் மாணவியின் தந்தையின் கோரிக்கையின்படி குறிப்பிட்ட அந்த ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்ஸன் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. பெங்களூருவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவான வானதி சீனிவாசன், “கோவை சின்மயா பள்ளி மாணவி விவகாரத்தை ஊதி பெரிதாக்கக்கூடாது.” என்று தெரிவித்திருப்பதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மதிமுக கலைக்கப்பட்டு திமுகவுடன் இணைக்கப்படும் என்றாரா வைகோ?
Fact check/ Verification
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை ஊதி பெரிதாக்கக்கூடாது என்று கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வேண்டுகோள் என்று பரவுகின்ற தகவலின் உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில் அவர் அதுபோன்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களிலோ அல்லது செய்தியிலோ சொல்லியுள்ளாரா என்று தேடினோம்.
அப்போது, கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நவம்பர் 12 ஆம் தேதியன்றே அவரது குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டு “கோவை +2 மாணவி பொன்தாரணியின் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது. தாய்க்கு ஆறுதல் கூற வார்த்தைகளில்லை. காவல்துறையின் விரைவான
பாரபட்சமில்லா நடவடிக்கை தேவை.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் சமயத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், “நெஞ்சைப் பிளக்கும் இந்த துயரச் செய்தியை கேள்விப்பட்டதும் உக்கடம் பகுதியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். ” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, வைரல் பதிவு குறித்த உண்மையறிய வானதி சீனிவாசனைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை ஊதி பெரிதாக்கக்கூடாது என்று நான் கூறியதாகப் பரவும் பதிவு பொய்யானது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” என்று விளக்கமளித்தார்.
Conclusion:
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை ஊதி பெரிதாக்கக்கூடாது என கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வேண்டுகோள் என்பதாகப் பரவும் தகவல் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)