Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
மதிமுக கலைக்கப்பட்டு திமுகவுடன் இணைக்கப்படும் என்று வைகோ அவர்கள் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“அரசியலில் இருந்து விலகுகிறேன். மதிமுக கலைக்கப்பட்டு விரைவில் திமுகவுடன் இணைக்கப்படும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்ததாக புதிய தலைமுறை நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இத்தகவல் குறித்த தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
ஒருவேளை வைகோ அரசியலில் இருந்து விலகி, தனது கட்சியை திமுகவுடன் இணைப்பதாக அறிவித்திருந்தால், அது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்திருக்கும்.
தமிழக ஊடகங்கள் மட்டுமில்லாமால் இந்திய ஊடகங்கள் அனைத்திலும் இது மிகப்பெரிய செய்திப் பொருளாக அமைந்திருக்கும். ஆனால் இவ்வாறு ஒரு ஒரு அறிவிப்பை வைகோ வெளியிட்டதாக எந்த ஒரு செய்தியும் வேறு ஊடகங்களில் இதுவரை வந்திருக்கவில்லை.
இதை வைத்து பார்க்கும்போதே மதிமுக பொதுச் செயலாலளர் வைகோ, “அரசியலில் இருந்து விலகுகிறேன். மதிமுக கலைக்கப்பட்டு விரைவில் திமுகவுடன் இணைக்கப்படும்” என்று அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் உணர முடிந்தது.
இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால், உண்மையிலேயே இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை பிரசுரித்ததா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை பிரசுரித்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் சரவணன் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்,
“இது போலியான நியூஸ்கார்ட், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் பிரசுரிக்கவில்லை.”
என்று விளக்கமளித்தார்.
இதனையடுத்து மதிமுக சமூக ஊடக பொறுப்பாளர் மின்னல் முகமது அலி அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். அவரும் “வைராலாகும் தகவல் பொய்யானது” என உறுதி செய்தார்.
Also Read: கேள்வி கேட்ட பெண்களை அண்ணாமலை மிரட்டியதாக பரவும் புகைப்படம்!
Conclusion
மதிமுக கலைக்கப்பட்டு திமுகவுடன் இணைக்கப்படும் என்று வைகோ அவர்கள் அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Mr. Saravanan, Digital Head, Puthiya Thalaimurai
Minnal Mohammed Ali, Social Media Coordinator,MDMK
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.