Claim: மார்ச் 01ஆம் தேதி விசிகவை திமுகவுடன் இணைக்க உள்ளார் திருமாவளவன்.
Fact:வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். நியூஸ் 18 தமிழ்நாடு இதை உறுதி செய்துள்ளது. இத்தகவல் பொய்யானது என்று விசிக தரப்பிலும் உறுதி செய்துள்ளனர்.
“விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மார்ச் 1ஆம் தேதி கட்சியை கலைத்துவிட்டு மொத்தமாக திமுகவில் இணைய உள்ளதாக தகவல்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக கட்சியை திமுகவுடன் இணைக்க திட்டம்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பை வெளியிட்டதா புதிய தலைமுறை?
Fact Check/Verification
விசிக தலைவர் திருமாவளவன் மார்ச் 01ஆம் தேதி விசிகவை திமுகவுடன் இணைக்க உள்ளதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து வைரலாகும் இத்தகவல் நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம். இத்தேடலில் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை.
இதனையடுத்து நியூஸ் 18 தமிழ்நாடின் டிஜிட்டல் பொறுப்பாளர் அனுவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று அவர் உறுதி செய்தார்.
Also Read: நடிகர் கார்த்தியிடம் சீமான் 1 கோடி கேட்டதாக பரவும் எடிட் வீடியோ!
Conclusion
திருமாவளவன் மார்ச் 01ஆம் தேதி விசிகவை திமுகவுடன் இணைக்க உள்ளதாக பரவும் தகவல் பொய்யானதாகும். விசிக தரப்பும், நியூஸ் 18 தமிழ்நாடு தரப்பும் இதை உறுதி செய்துள்ளது. இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation with Vanni Arasu, Deputy General Secretary, VCK
Phone Conversation with Anu, News 18 Tamilnadu
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்