திருப்பதி கோயில் அர்ச்சகர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட 128 கிலோ தங்க நகைகள் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் ஒருவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது அவரது வீட்டில் இருந்து 128 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக “திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது கிடைத்த பணம், தங்க நகைகள், வைரம் எவ்வளவு தெரியுமா ??? 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள்….” என்கிற வாசகங்களுடன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?
Fact Check/Verification
திருப்பதி கோயில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ செய்தி குறித்த உண்மையறிய குறிப்பிட்ட வீடியோவில் இருந்து இமேஜ் பிக்சல்களைப் பிரித்து ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உள்ளாக்கினோம்.
அப்போது, குறிப்பிட்ட வீடியோவில் உள்ள நகைகள் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோஸ் ஆலூக்காஸ் தங்க நகைக்கடையில் இருந்து திருடப்பட்டு கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டவை என்பது தொடர்பாக செய்தி மற்றும் வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன.

குறிப்பிட்ட மீட்பு செய்தியில் முன்னணி செய்தி நிறுவனங்கள் இந்த வைரல் வீடியோவை பதிவிட்டுள்ளன.
எனவே, குறிப்பிட்ட வீடியோ காட்சி, நகைக்கடை நகைகள் மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகியது.
இதுகுறித்த காவல்துறையினரின் ட்விட்டர் பதிவுகளையும் இங்கே இணைத்துள்ளோம்.
Conclusion
திருப்பதி கோயில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
The Indian Express: https://indianexpress.com/article/cities/chennai/tamil-nadu-burglary-vellore-jos-alukkas-7683381/
Thanthi TV: https://www.youtube.com/watch?v=9VNsZoN9ILI
ASP Vellore’s Tweet: https://twitter.com/AspVellore/status/1473054880939999233?s=20
VijayaKumar IPS: https://twitter.com/vijaypnpa_ips/status/1473146973683273728?s=20
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்