Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உரிமை கோரல் :
Sudha Murthy resigns from the Thirupathi board. Jagan appoints his uncle as chairman of the board. What’s his religion?
YEHOVAH VINCENT Subbareddy( YV SUBBARADDY) is the NEWLY APPOINTED CHAIRMAN OF TIRUPATI BALAJI TEMPLE. He is a staunch CHRISTIAN EVANGELIST.* Distribute the message in printed form to all devotees everywhere in Tirupathi and all temples.
சுதா மூர்த்தி திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து விலகினார். ஜெகன் மோகன் ரெட்டி அந்தப் பதவியில் தனது மாமாவைத் தேவஸ்தானத்தின் தலைவராக நியமித்து உள்ளார். அவரது மதம் என்ன? யாஹோவா வின்ஸன்ட் சுப்பா ரெட்டியை (YV SUBBARADDY) இப்பொழுது புதிதாக திருமலாத் திருப்பதியின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒரு தீவிர கிறிஸ்டியன் எவாஞ்சலிஸ்ட். அனைத்து கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் இந்தச் செய்தியை அச்சிடப்பட்ட வடிவத்தில் பரவச் செய்யவும் .
சரிபார்ப்பு :
கொரோனாத் தொற்று அதிகம் பரவி இருக்கும் இந்த நிலையில் திருமலாத் திருப்பதித் தேவஸ்தானத்தில் தினமும் புதுப்புதுச் சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகச் சுதா மூர்த்தி அவர்கள் பதவி விலகியத் தருணத்தில் இருந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டு உள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் மாமா ஒய்.வி. சுப்பா ரெட்டியின் முழு பெயர் யெஹோவா வின்சென்ட் சுப்பாரெட்டி என்று கிஷ்வர் குற்றம் சாட்டியுள்ளார் . இன்போசிஸ் அறக்கட்டளையின் வழிகாட்டி மற்றும் தலைவரான சுதா மூர்த்தியை திருமலா நிர்வாகக் குழுவில் இருந்து மாற்றினார் மேலும் அவர் ஆந்திராவில் அதிகமானத் தேவாலயங்களை பரப்பவே இந்த வேலையைச் செய்கிறார் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார்.
நியூஸ்செக்கரில் இதன் உண்மைத் தன்மையை அறியத் தொடங்கினோம் .
உண்மை தன்மை :
முதலில் Y V சுப்பா ரெட்டியின் முழு பெயர் “யர்ரம் வெங்கட்டா சுப்பா ரெட்டி” யெஹோவா வின்சென்ட் சுப்பா ரெட்டி இல்லை என்பதை அறிந்துகொண்டோம். மது கிஷ்வர் தனது ட்வீட்டில் கூறியதற்குப் பதிலளிக்கும் வகையில் ட்வீட்டை மறு ட்வீட் செய்து சுப்பா ரெட்டி அவர்களே அதனை உறுதிப்படுத்தியுள்ளார், அதில் அவரது வாக்கெடுப்பு வாக்குமூலத்தின் நகலை இணைத்து அதனை உறுதியும் படுத்தி உள்ளார்
சுப்பா ரெட்டி ஒரு கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டையும் மறு ட்வீட் செய்துள்ளார், அதில் அவர் பிறந்ததிலிருந்து ஒரு இந்து என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சுப்பா ரெட்டி அவர்கள் ஜெகன் மோகனின் தாய்வழி உறவினர் ஆவார்,ஜெகன் மோகனின் அம்மா பிறப்பால் இந்து மதத்தைச் சார்ந்தவர் YSR ரெட்டியைத் திருமணம் செய்த பிறகே அவர் கிருஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் தாய்வழி உறவினர்கள் அனைவரும் இன்னும் இந்து மதத்தையேப் பின்பற்றி வருகிறார்கள்
இன்போசிஸ் அறக்கட்டளையின் வழிகாட்டியும், தலைவருமான சுதா மூர்த்தி, டி.டி.டி.யின் குழுவிலிருந்து ராஜினாமா செய்ததில் எந்த விதமான அரசியல் சம்பந்தமும் இல்லையென்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தி நியூஸ் மினிட் உடனான உரையாடலில், சுதா மூர்த்தி, “நாங்கள் முந்தைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டோம், அழைப்பு இல்லாமல் தொடர்வது நல்லதல்ல. எனது முடிவில் எந்த அரசியல் சம்பந்தமும் இல்லை , இதைச் செய்வது ஒரு கண்ணியமான விஷயம். ”என்றுத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “எனது ராஜினாமாவுக்கும் புதிய டிடிடி தலைவராக இருப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பு இல்லை. புதிய அரசு என்னை அழைத்தால் நான் சேருவேன்”, என்று மிகத் தெளிவாக விளக்கம் அளித்து உள்ளார் .
முடிவுரை :
எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் ஒய்.வி.சுப்பா ரெட்டியின் முழுப்பெயர் யெஹோவா வின்சென்ட் சுப்பா ரெட்டி என்றப் கூற்று முற்றிலும் தவறானது, அதேபோல் சுதா மூர்த்தி அவர்கள் பதவி விலகியதற்கும் இதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லையென்று அறியமுடிகிறது. மதத்தின் பெயரில் இது போன்றத் தவறானச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்
Sources
Result: False
(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 17, 2025
Ramkumar Kaliamurthy
October 21, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 24, 2024