Claim: பிரசாந்த் ரங்கசாமி வேட்டையன் திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம்
Fact: வைரலாகும் வீடியோ அவர் அண்ணாத்த திரைப்படத்திற்கு கொடுத்த விமர்சனமாகும்.
திரைப்பட விமர்சகர் பிரசாந்த், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”First half, second half rendumey mmbiruchu pola..Panda kitaye usanadi vanagirukan .. apo bluesattai kita” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?
Fact Check/Verification
திரைப்பட விமர்சகர் பிரசாந்த் வேட்டையன் திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது பிரசாந்த் ரங்கசாமி கடந்த நவம்பர் 04, 2021 அன்று ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்திற்கு அளித்திருந்த விமர்சன வீடியோ tamilcinemareview யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, வேட்டையன் திரைப்படத்திற்கு பிரசாந்த் ரங்கசாமி அளித்த விமர்சனம் என்று பரவிய பதிவை, விமர்சகர் பிரசாந்த் ”Dey dey . Ithu annathe review da . Endaa ipdi panreenga .” என்று விளக்கமளித்து பதிவிட்டுள்ளார்.
Also Read: கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினாரா?
Conclusion
திரைப்பட விமர்சகர் பிரசாந்த் வேட்டையன் திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் என்று பரவும் வீடியோ அவர் நடிகர் ரஜினிகாந்த நடித்த அண்ணாத்த திரைப்படத்திற்கு கொடுத்த விமர்சனம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
YouTube Video By, tamilcinemareview, Dated November 04, 2021
X Post By @itisprashanth, Dated October 10, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)