ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: பால்வெளி அண்டத்தில் சமஸ்கிருத ஓம் ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று பேசினாரா...

Fact Check: பால்வெளி அண்டத்தில் சமஸ்கிருத ஓம் ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று பேசினாரா துணைக்குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
இந்திய நாட்டின் சிறப்புமிக்க சமஸ்கிருத மொழியில் உள்ள ‘ஓம்’, பால் அண்டத்தில் இருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது – குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர்.

Fact
ஐஐடி மெட்ராஸில் உரையாற்றிய துணைக்குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் அத்தகைய கருத்தைக் கூறவில்லை. பரவும் தகவல் தவறானதாகும்.

பால்வெளி அண்டத்தில் ஓம் என்கிற ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று துணைக்குடியரசுத்தலைவர் ஜெகதீர் தன்கர் பேசியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சன்நியூஸ், குமுதம், வேந்தர் நியூஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்த நிலையில், சன் நியூஸ் இதனை நீக்கிவிட்டது. எனினும், அந்த நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பால்வெளி அண்டத்தில்
Screenshot From Facebook/karthik.sivaraman.33
பால்வெளி அண்டத்தில்
Screenshot From Facebook/VNews27
பால்வெளி அண்டத்தில்
Screenshot From Facebook/KumudamOnline

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்றாரா பாஜக எம்.பி. கணேஷ் சிங்?

Fact Check/Verification

பால்வெளி அண்டத்தில் சமஸ்கிருத ஓம் என்கிற ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று ஐஐடி மெட்ராஸில் துணைக்குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற Centre For Innovation Facility மையத்தை கடந்த பிப்ரவரி 28, 2023 அன்று தொடங்கி வைத்து உரையாற்றினார் துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர்.

ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் அவருடைய உரையின் முழுமையான வீடியோ பதிவிடப்பட்டுள்ள நிலையில், நிகழ்வின் இறுதியில் நடைபெற்ற மாணவர்களுடனான கேள்வி-பதில் உரையாடல் பிரிவில் (1.35.43) ஹரிகேத் கணேஷ் என்னும் மாணவர் ஒருவர் “உலகளாவிய அளவில் இந்தியாவின் தரத்தை உயர்த்துவதில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளின் பங்கு என்ன? இந்திய தயாரிப்புகள் குறித்த உங்களது பார்வை என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த துணைக்குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர், “நாம் ஜனநாயகத்தின் தாய் மட்டுமல்ல; புதிய கண்டுபிடிப்புகளுக்கும் நாம்தான் தாய். 0 என்கிற எண் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? நம்மால். சமஸ்கிருதத்தின் வன்மையைப் பாருங்கள். ஓம்..உலகின் சிறந்த நிறுவனமான நாசாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முக்கியமான மொழி என்றால் அது சமஸ்கிருதம்தான்.” என்பதாக பதிலளித்திருந்தார். ஆனால்,குறிப்பிட்ட வீடியோவில் பால்வெளி அண்டத்தில் ஓம் என்கிற ஒலி இருப்பதை நாசா கண்டறிந்துள்ளது என்று அவர் எங்கும் பேசியிருக்கவில்லை.

எனினும், அவர் கூறிய கருத்தில் நாசாவின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு முக்கிய மொழி சமஸ்கிருதம் என்பதற்கான உறுதியான தரவுகள் எங்கும் இல்லை. நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுகுறித்த தரவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சூரியனின் ஒரு பகுதி உடைந்ததை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படமெடுத்ததா? உண்மை என்ன?

Conclusion

பால்வெளி அண்டத்தில் சமஸ்கிருத ஓம் என்கிற ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று ஐஐடி மெட்ராஸில் துணைக்குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாகப் பரவுகின்ற செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, IIT Madras, Dated February 28, 2023
Twitter Post From, IIT Madras, Dated February 28, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular