ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஉதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தாரா விஜய்?

உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தாரா விஜய்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தார் விஜய்.

Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யபட்டதாகும். விஜய் பேசிய விழாவில் உதயநிதி பங்கேற்கவில்லை. மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற உதயநிதியின் வீடியோவை இணைத்து இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. விஜயும் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. லட்சியத்தை பெரிதாக வைக்க வேண்டும் எனும் பொருளில் அவர் பேசியதை பாதி பகுதியை மட்டும் வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது. 

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று (29/09/2024) பதவியேற்றுள்ளார். இந்நிலையில் லியோ வெற்றி விழாவில் உதயநிதியை நேரில் வைத்துக்கொண்டே ‘அப்பா சட்டை’ என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவ்வீடியோவில், “வீட்ல ஒரு குட்டிப்பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய போட்டுக்குவான். அப்பாவோடை வாட்சை எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உக்காந்துக்குவான். அந்த ஷர்ட் அவனுக்கு செட்டே ஆகாது. தொளதொளன்னு இருக்கும். வாட்ச் கையிலே நிக்காது. அந்த சேர்ல உக்கார்லமா? வேணாமா? அது அவனுக்கு தகுதியா? இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. ‘அப்பா சட்டை’ ….” என்று விஜய் மேடையில் நின்று பேசுவதாய் இருந்தது. உதயநிதி இதை அரங்கத்தில் அமர்ந்து கேட்பாதாய் இருந்தது.

இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்றதை விமர்சித்து வருகின்றனர்.

உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தார் விஜய்.

X Link | Archive Link

உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தார் விஜய்.

Archive Link

உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தார் விஜய்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பெங்களூருவில் கோலத்தை அழித்த பெண் வேற்று மதத்தவர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விஜய் விமர்சித்ததாக வீடியோ ஒன்று பரவியதை அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் சன் நெக்ஸ்ட் இணையத்தளத்தில் லியோ வெற்றி விழாவின் முழுப்பகுதி பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதை முழுமையாக ஆய்வு செய்ததில் இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவே இல்லை என அறிய முடிந்தது.

தொடர்ந்து வைரலாகும் பேச்சு குறித்து ஆராய்ந்தோம். சன் டிவியின் யூடியூப் பக்கத்தில்    விஜயின் முழுப்பேச்சு பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில் குறிக்கோளை பெரிதாக வைக்க வேண்டும் என்று விஜய் பேசி இருப்பதை காண முடிந்தது. இதுத்தொடர்பாக கதை ஒன்றையும் அவர் கூறி இருந்தார்.

வீடியோவின் 08:20 நேரத்தில் அக்கதையை அவர் கூறி இருந்தார். “வீட்ல ஒரு குட்டிப்பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய போட்டுக்குவான். அப்பாவோட வாட்சை எடுத்து கட்டிக்குவான். அப்பாவோடை சேர்ல ஏறி உக்காந்துக்குவான். அந்த ஷர்ட் அவனுக்கு செட்டே ஆகாது. தொளதொளன்னு இருக்கும். வாட்ச் கையிலே நிக்காது. அந்த சேர்ல உக்கார்லமா? வேணாமா? அது அவனுக்கு தகுதியா? இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை…. அப்பா சட்டை.. அப்பா மாறி ஆவணும்னு கனவு. இதிலென்ன தவறு? அதனால நீ பெருசா கனவு காணு நண்பா! அதையெல்லாம் ஒருத்தரும் ஒன்னும் சொல்ல முடியாது. Small aim is a crime’-மாம். So always have a great aim. கலாம் சார் சொன்ன ஒரு விஷயம்….”  என்று விஜய் பேசி இருந்தார்.

இதனடிப்படையில் பார்க்கையில் விஜய் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உதயநிதி குறித்து பேசி இருக்கவில்லை என்பதை அறிய முடிகின்றது. லட்சியங்களை பெரியதாக வைக்க வேண்டும் என்று கூறியே அக்கதையை அவர் கூறியுள்ளார். விஜய் பேசியதில் பாதி பகுதியை மட்டும் வைத்து அவர் உதயநிதியை விமர்சித்ததாக தவறாக பரப்பப்படுகின்றது.

இதனையடுத்து இவ்விழாவில் உதயநிதி பங்கேற்கவில்லை என தெளிவாகிய நிலையில் உதயநிதி பங்கேற்ற வேறு நிகழ்ச்சியின் வீடியோ கிளிப்புகளை எடுத்து வைரலாகும் உருவாக்கப்பட்டுள்ளது என உணர முடிந்தது.

இதனைத்தொடர்ந்து அவ்வீடியோ கிளிப்புகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என தேடியதில் அவை மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிலிருந்து எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது.

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவின் முழுப்பகுதிதி ரெட் ஜெயண்ட் மூவிஸின் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அவ்வீடியோவிலிருந்த உதயநிதியையும் வைரலாகும் வீடியோவிலிருந்த உதயநிதியையும் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த உண்மை நமக்கு தெளிவாகியது.

உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தார் விஜய்.

 Also Read: திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சுத்தம் செய்தாரா பவன் கல்யாண்?

Conclusion

உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விஜய் விமர்சித்ததாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். விஜய் பேசிய லியோ வெற்றி விழாவில் உதயநிதி பங்கேற்கவில்லை. மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற உதயநிதியின் வீடியோவை இணைத்து இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

விஜயும் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. லட்சியத்தை பெரிதாக வைக்க வேண்டும் எனும் பொருளில் அவர் பேசியதை பாதி பகுதியை மட்டும் வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது. 

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Sources
YouTube Video from Sun TV
YouTube Video from Red Giant Movies


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular