Fact Check
தவெக தலைவர் விஜய் இயக்குனர் S.A.சந்திரசேகரின் சொந்த மகனில்லை என்று பரவும் தவறான தகவல்!
Claim
தவெக தலைவர் விஜய் இயக்குனர் S.A.சந்திரசேகரின் சொந்த மகனில்லை.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Also Read: கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாரா விஜய்?
Fact
தவெக தலைவர் விஜய் இயக்குனர் S.A.சந்திரசேகரின் சொந்த மகனில்லை என்று பரப்பப்படும் தகவலில் விஜயின் தாயார் ஷோபாவின் இரண்டாம் கணவர்தான் இயக்குனர் S.A.சந்திரசேகர் என்றும், ஷோபா சந்திரசேகரை கிறித்தவ முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார் என்றும், இத்திருமணத்தில் விஜயும் கலந்துக்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகவல் குறித்த உண்மையை அறிய இதுக்குறித்து தேடினோம். அத்தேடலில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என அறிய முடிந்தது.
இயக்குனர் S.A.சந்திரசேகர் அவரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான ‘யார் இந்த எஸ்ஏசி’ யூடியூப் பக்கத்தில் ஷோபாவுக்கும் அவருக்குமான காதல் குறித்தும், திருமணம் குறித்தும் பேசி இருப்பதை காண முடிந்தது.
அதில் ஷோபாவுக்கு 15 வயது இருந்தபோதிலிருந்தே அவரை காதலித்ததாகவும், ஆறு வருட காதலுக்கு பின் இருவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலையில் திருமணம் செய்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருப்பதை காண முடிந்தது. அதுக்குறித்த வீடியோக்களை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து இவ்விருவரும் சில வருடங்களுக்கு பிறகு கிறித்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்துக்கொண்டதாக மற்றொரு வீடியோவில் தெரிவித்திருந்தார். இத்திருமணத்தில் விஜய் கலந்துக்கொண்டதாகவும், அச்சமயத்தில் விஜயின் தாயார் இரண்டாம் முறை கருவுற்றிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வீடியோவில் பெற்றோர் திருமணத்தில் விஜய் கலந்துக்கொண்ட புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அவ்வீடியோவை இங்கே காணலாம்.

Also Read: கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடினரா?
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் தவெக தலைவர் விஜய் இயக்குனர் S.A.சந்திரசேகரின் சொந்த மகனில்லை என்று பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகின்றது.
Sources
YouTube video by Yaar Intha SAC, dated July 1, 2022
YouTube video by Yaar Intha SAC, dated July 8, 2022
YouTube video by Yaar Intha SAC, dated August 5, 2022