ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமானதா விகடன்?

பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமானதா விகடன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

விகடன் குழுமம் பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக அறிவிக்கப்பட்டதாக கூறி ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

விகடன் குழுமம் பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக அறிவிக்கப்பட்டதாக கூறி பரவும் ஸ்கிரீன்ஷாட்

மாதம் 50 லட்சத்துக்கு ஆனந்த விகடனை அடகு வைத்ததாக இந்தியா டுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலானது. இதை நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து, இது முற்றிலும் பொய்யானது என்று விளக்கி இருந்தோம்.

அக்கட்டுரையை படிக்க: ஆனந்த விகடன் நிர்வாக இயக்குனர் குறித்து இந்தியா டுடே அட்டைப்படச் செய்தி வெளியிட்டதா?

இதனைத் தொடர்ந்து தற்போது விகடன் குழுமம் பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தி குழுமம் என்று பாஜக சார்பில், அதன அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டதாக கூறி ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விகடன் குழுமம் பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக அறிவிக்கப்பட்டதாக கூறி பரவும் ஸ்கிரீன்ஷாட்  - 1

Twitter Link | Archive Link

விகடன் குழுமம் பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக அறிவிக்கப்பட்டதாக கூறி பரவும் ஸ்கிரீன்ஷாட்  - 2

Facebook Link

விகடன் குழுமம் பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக அறிவிக்கப்பட்டதாக கூறி பரவும் ஸ்கிரீன்ஷாட்  - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

விகடன் குழுமம் பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக  அறிவிக்கப்பட்டதாக கூறி ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முன்னதாக இவ்வாறு ஒரு அறிவிப்பை  டிவீட்டாக  தமிழக பாஜக பதிவிட்டதா என்பதை உறுதி செய்ய தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். இதில் இவ்வாறு டிவீட் பதிவு செய்யப்பட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை.

எனவே பாஜக சமூக ஊடக அணி தலைவர் சிடிஆர் நிர்மல்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் டிவீட் குறித்து  கேட்டோம்.  இதற்கு, இது பொய்யானது இவ்வாறு ஒரு டிவீட்டை நாங்கள் பதிவிடவில்லை என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து விகடன் தரப்பைத் தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து கேட்டதற்கு, “இத்தகவல் பொய்யானது” என்று அவர்களும் உறுதி செய்தனர்.

Also Read: பக்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தியவர் இந்தியரா? உண்மை என்ன?

Conclusion

விகடன் குழுமம் பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக அறிவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்கிரீன்ஷாட் போலியானதாகும்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Source

Newschecker Conversations

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular