Friday, April 25, 2025

Fact Check

ஆனந்த விகடன் நிர்வாக இயக்குனர் குறித்து இந்தியா டுடே அட்டைப்படச் செய்தி வெளியிட்டதா?

banner_image

ஆனந்த விகடன் நிர்வாக இயக்குனரான சீனிவாசன் குறித்தும், ஆனந்த விகடன் இதழ் குறித்தும் இந்தியா டுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

ஆனந்த விகடன்
Source: Facebook

தமிழகத்தில் பிரபலான செய்திக்குழுமங்களில் ஒன்றான விகடன் நிறுவனம் குறித்தும், அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி வெளியீடுகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அக்குழும செய்திகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சார்பாக இருப்பதாக வலைத்தளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், “மாதம் 50 லட்சத்துக்கு ஆனந்த விகடனை அடகு வைத்த சீனிவாசன். நிர்வாகக் குளறுபடியால் விழிபிதுங்கி நிற்கும் விகடன் குழுமம். அஸ்தமனக் காலத்தில் 100 ஆண்டுகால ஊடகம்” என்பதாக இந்தியா டுடே அட்டைப்படச் செய்தி வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஆனந்த விகடன்
Source: Facebook

Facebook Link

ஆனந்த விகடன்
Source: Facebook

Facebook Link

Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பக்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தியவர் இந்தியரா? உண்மை என்ன?

Fact Check/Verification

ஆனந்த விகடன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் குறித்து இந்தியா டுடே அட்டைப்படச் செய்தி வெளியிட்டதாக பரவுகின்ற புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

ஆனந்த விகடன் பதிப்பாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் குறித்து புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்திய டுடே அட்டைப்படத்தில் பதிப்பு தேதி, ஏப்ரல் 1, 2022 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா டுடே இதழானது தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் கடந்த 2015, பிப்ரவரி 25 இதழுடன் தனது பதிப்பை நிறுத்திக் கொண்டுவிட்டது. இதுகுறித்து செய்திகளும் முன்னணி ஊடகங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த விகடன்

ஏற்கனவே, மமக தலைவர் ஜவாஹிருல்லா பற்றிய அட்டைப்படம் வெளியிட்டது இந்தியா டுடே என்பதாக பரவியபோதே இதுகுறித்து விளக்கமளித்து நாங்கள் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான கடைசி இந்தியா டுடே இதழில், இதுவே தமிழில் கடைசி பதிப்பு என்கிற செய்தியை அதன் நிறுவனர் மற்றும் பதிப்பாளர் ஆரோன் பூரி வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, ஆனந்த விகடன் இதழ் குறித்து வெளியாகியுள்ள அட்டைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

Conclusion

ஆனந்த விகடன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் குறித்து இந்தியா டுடே அட்டைப்படச் செய்தி வெளியிட்டதாக பரவுகின்ற புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,908

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage