ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckViralநடிகர் ரன்பீர் கபூர் ஆத்திரத்தில் ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்தாரா? உண்மை என்ன?

நடிகர் ரன்பீர் கபூர் ஆத்திரத்தில் ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்தாரா? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

நடிகர் ரன்பீர் கபூர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை ஆத்திரத்தில் தூக்கி வீசியதாக வீடியோத்தகவல் ஒன்று வைரலாகிறது.

Screenshot From Twitter @MyKeechugal

இதனைத்தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ரன்பீர் கபூருக்கு எதிராக பலரும் இச்செயலை வசைபாடி வருகின்றனர்.

Screenshot From Twitter @jayaraman418

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்தாரா?

Fact check / Verification

நடிகர் ரன்பீர் கபூர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை ஆத்திரத்துடன் தூக்கி வீசியதாகப் பரவுகின்ற வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோ குறித்து கீ-வேர்ட் சர்ச் செய்தபோது சமூக வலைத்தளங்களில் OPPO India என்னும் செல்போன் நிறுவனம் வெளியிட்டிருந்த இந்த வீடியோவின் முழுப்பதிவு நமக்குக் கிடைத்தது.

”Just in case you’ve missed it, #RanbirKapoor hands a fan an upgrade of a lifetime with the new #OPPOReno8T. The new OPPO RENO 8T strikes the perfect balance between immersive visuals & a relaxed grip for an all-round premium experience. Releasing Feb 3rd. #AStepAboveஎன்று தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் குறிப்பிட்ட நபரின் பழைய செல்போனை எறிந்துவிட்டு புது oppo மாடல் போனை ரன்பீர் கபூர் பரிசளிப்பது போல விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரில் அறிமுகமாகும் OPPO நிறுவன புதுவகை செல்போனுக்கான விளம்பரம் இது என்பதும் தெரிய வந்தது.

அதுமட்டுமின்றி, ரன்பீர் கபூர் செல்போனை தூக்கி எறிந்ததாகச் சொல்லப்பட்ட நபரும் ஒரு நடிகர் என்பதும் தெரியவந்தது. நைனேஷ் என்கிற அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “Hi guys, it’s me. He didn’t throw my phone. He’s a sweetheart” என்று பதிவிட்டுள்ளார்.

Instagram will load in the frontend.

Also Read: 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக டி.ஆர் பாலு குறித்து தவறான செய்தி பரப்பும் அண்ணாமலை!

Conclusion

நடிகர் ரன்பீர் கபூர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை ஆத்திரத்துடன் தூக்கி வீசியதாகப் பரவுகின்ற வீடியோ OPPO விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Twitter Post From, OPPO India, January 28, 2023
Insta Post From, Nainesh Karamchandani, January 28, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular