புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkபிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்தாரா?

பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ஆறு மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி சந்தித்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவும் தகவல்

இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவும் தகவல்
Screengrab from Twitter @Ukartikgarga
பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவும் தகவல்
Screengrab from Facebook/ ஆர்.பி.எம். அகோர சிவம்
பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவும் தகவல்
Screengrab from Facebook/ காவி தமிழச்சி

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் அடித்து விரட்டியதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

Factcheck / Verification

பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் படத்தில் ராகுல் காந்தியுடன் இருப்பவர் பிபிசி தயாரிப்பாளர் அல்ல, அவர் இங்கிலாந்து எம்.பி. ஜெரோமின் கார்பின் என அறிய முடிந்தது.  இவர்களுடன் மூன்றாவதாக இருப்பவர் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோதா ஆவார்.

ராகுல் காந்தி கடந்த வருடம் மே மாதத்தில் இலண்டன் சென்றபோது சாம் பித்ரோதா, மற்றும் ஜெரோமின் கார்பினை சந்தித்துள்ளார். இச்சந்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மே 23, 2022 அன்று பகிரப்பட்டுள்ளது.  

அச்சமயத்தில் ராகுல்காந்தியின் இப்புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதுக்குறித்து ஊடகச் செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

தொடர்ந்து ஆய்வு செய்கையில், சாம் பித்ரோதா அவரது டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் படத்தில் ராகுல்காந்தியுடன் இருப்பவர் யாரென்று விளக்கியும், அவர் பிபிசி ஊழியர் இல்லை என்று தெளிவுப்படுத்தியும் டிவீட் ஒன்றை பதிவிட்டுள்ளதை காண முடிந்தது.

இதனையடுத்து ஆய்வின் அடுத்தக்கட்டமாக பிபிசியை குறித்து நியூஸ்செக்கர் சார்பிலிருந்து தொடர்புக்கொண்டு வைரலாகும் செய்தி விசாரித்தோம். அவர்கள், பிபிசியின் தயாரிப்பு பிரிவிலிருந்து யாரும் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை என்று பதிலளித்தனர்.

Also Read: சரியான இருக்கை ஒதுக்கப்படாததால் குடியரசு தின விழாவைப் புறக்கணித்தாரா எம்பி எம்.எம்.அப்துல்லா?

Conclusion

பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ஆறு மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி சந்தித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தி நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.

Result: False

Sources

Tweet from Indian Overseas Congress dated May 23, 2022
Tweet from Sam Pitroda dated Jan 25, 2023
Email Conversation with BBC

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular