ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckViralநியாயம் கேட்ட இளைஞரை தாக்கினாரா பிரிஜ் பூஷன் சரண் சிங்?

நியாயம் கேட்ட இளைஞரை தாக்கினாரா பிரிஜ் பூஷன் சரண் சிங்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மல்யுத்த வீராங்கனைகளுக்காக நியாயம் கேட்ட இளைஞரை பிரிஜ் பூஷன் சரண் சிங் தாக்கினார்
Fact: வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகளுக்காக நியாயம் கேட்ட இளைஞர் ஒருவரை பிரிஜ் பூஷன் சரண் சிங் சரமாரியாக தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மல்யுத்த வீராங்கனைகளுக்காக நியாயம் கேட்ட இளைஞரை பிரிஜ் பூஷன் சரண் சிங் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
Screenshot from Twitter@ACatakkatt40718

வைரலாகும் இத்தகவலின் சேமிப்பு பதிவை இங்கே காணலாம்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check/Verification

மல்யுத்த வீராங்கனைகளுக்காக நியாயம் கேட்ட இளைஞரை பிரிஜ் பூஷன் சரண் சிங் தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் வைரலாகும் இந்த வீடியோ பழைய வீடியோ என்பதும், இந்த வீடியோவில் காணப்படும் சம்பவத்திற்கும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நம்மால் அறிய முடிந்தது. ஈநியூஸ் எனும் இணைய ஊடகம், ‘விழா மேடையில் வாலிபரை சரமாரியாக அடித்த பாஜக எம்பி – கண்டனம் தெரிவித்த பொதுமக்கள்’ என்ற தலைப்பில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது

மல்யுத்த வீராங்கனைகளுக்காக நியாயம் கேட்ட இளைஞரை பிரிஜ் பூஷன் சரண் சிங் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
Screengrab from ENEWZ

அந்த செய்தியில், ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழாவில் பிரிஜ் பூஷன் சரண் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாகவும், அப்போது 15 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் ஒருவர் தானும் அப்போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று பிரிஜ் பூஷனை தொல்லை செய்ததாகவும், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அவர் அந்த இளைஞரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடியதில் மேலும் சில ஊடகங்களிலும் இதே தகவலுடன் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

Also Read: ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

மல்யுத்த வீராங்கனைகளுக்காக நியாயம் கேட்ட இளைஞரை பிரிஜ் பூஷன் சரண் சிங் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ தவறானதாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report published by ENEWZ, dated December 19, 2021
Report published by NDTV, dated December 18, 2021
Report published by Outlook, dated December 19, 2021
Report published by BBC on YouTube, dated December 18, 2021

(இந்த செய்தி குறித்து நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது)

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular